வாணி – இன்று ஒரு சிறப்பான உணவு வகையின் தயாரிப்பு பற்றி கூறுகின்றோம். சான் துங் மாநிலத்தின் உணவு வகை இதுவாகும்.
க்ளீட்டஸ் – இதில் கடல் வெள்ளரி என்னும் கடல் நீர் வளர்ப்பு முக்கியமாக அடக்கம்.
வாணி – ஆமாம். இந்த வகை கடல் நீர் வளர்ப்பு கறுப்பு அல்லது மஞ்சல் நிறமாகும். இதன் உருவம் வெள்ளரி போன்றது. ஆகையால், கடல் வெள்ளரி என்று பெயரிடப்படுகின்றது. சீனாவில் இதற்கு கடல் ginseng என்ற மற்றொரு பெயர் உண்டு. அதிக வெண்புரதம், குறைவான தொழுப்புச்சத்து ஆகியவற்றைக் கொண்ட இது சீனாவில் மிக வரவேற்கபடுகின்றது.
க்ளீட்டஸ் – அப்படியா, நீங்கள் செய்முறை கூறுங்கள்.
வாணி – சரி, முதலில் தேவையான பொருட்கள். கடல் வெள்ளரி 500 கிராம் வெங்காயம் 2 இஞ்சி சுமார் 10 கிராம் சோயா சாஸ் 15 கிராம் சர்க்கரை 3 கிராம் சமையல் மது 4 தேக்கரண்டி கோழி சூப் 300 மல்லி லிட்டர் உப்பு 5 கிராம் உணவு எண்ணெய் தேக்கரண்டி
வாணி – முதலில், நீங்கள் கடல் வெள்ளரியை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். பிறகு, இதனை 2 செடிமீட்டர் அகலம்,6 செடிமீட்டர் நீளமான பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
க்ளீட்டஸ் – வெங்காயத்தை பொடிபொடியாகயும், இஞ்சியை piece ஆகவும் நறுக்கவும்.
வாணி – வாணலியை அடுப்பின் மீது வைத்து, இதில் வென்னீரை ஊற்றி, நறுக்கப்பட்ட கடல் வெள்ளரியின் பொடிகளை இதில் வைக்கவும். வேகவிடுக்கப்பட்ட பின், இன்னும் 2 நிமிடங்களாக வேக வையுங்கள்.
க்ளீட்டஸ் – வாணலியை சுத்தம் செய்து, மீண்டும் அடுப்பின் மீது வையுங்கள். இதில் உணவு எண்ணெயை ஊற்றி, 10 விநாடிக்குப் பின், வெங்காயம், இஞ்சி ஆகியவற்றை இதில் கொட்டலாம். இவை இல்லாம் பொன் நிறமாகிய பின், எண்ணெயிலிருந்து எடுக்கலாம்.
வாணி – வாணலியில் கொஞ்சல் எண்ணெய் நிலைநிறுத்த வேண்டும். கோழி சூப், சமையல் மது, சோயா சாஸ், சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கொட்டலாம். வேகவிடுக்கப்பட்ட பின், கடல் வெள்ளரி பொடிகளை இதில் கொட்டலாம். வறுக்கப்பட்ட வெங்காயத்தை இதில் சேர்க்கவும். மிதமான சூட்டில் சுமார் 5 நிமிடங்களாக வேகவிடுங்கள்.
க்ளீட்டஸ் – வறுவலிலான சூப் மெதுவாக காய்ந்தது. இப்போது மிஞ்சிய வெங்காய எண்ணெயை ஊற்றவும். இதோ இன்றைய வறுவல்.
வாணி – முன்பு சொன்னது போல், கடல் வெள்ளரி ஊட்டச் சத்து மிகுந்த உணவு வகையாகும். ஆனால், இதற்கு குறிப்பிட்ட சுவை இல்லை. இந்த உணவு வகை சுவையாக மாற வேண்டுமானால், சமையல் தொழில் நுட்பம் தேவைப்படுகின்றது.
|