• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-26 17:53:56    
ஆடவர் ஆடை வடிவமைப்பாளர் JI WEN BO

cri

JI WEN BO

இவ்வாண்டு ஜனவரி திங்களில் இத்தாலிய MILAN புது பாணி ஆடை வாரத்தில் காட்சிக்கு வைக்கப்பட்ட சீன ஆடை வடிவமைப்பாளர் JI WEN BO வடிவமைத்த LI LANG ஆடவர் ஆடைகள், சர்வதேச புது பாணி ஆடை துறையின் கவனத்தைக் ஈர்த்தன. சீன ஆடவர் ஆடை சின்னம் ஒன்று உலகில் அதியுயர் நிலை புது பாணி ஆடை வாரத்தில் நுழைவது இதுவே முதல்முறை. எளிமை, இலகுவாக பயன்படுத்தக் கூடிய தன்மை, தேசிய இனப் பண்பாடு, புத்தாக்கம் என்ற கருத்தே, JI WEN BOவின் வெற்றிக்கு காரணம். அண்மையில் எமது செய்தியாளர் ஒருவர் அவரை பேட்டி கண்டார்.

வட கிழக்கு சீனாவின் JI LIN மாநிலத்தைச் சேர்ந்த அவர், உயரமானவர் அல்ல. கறுப்பு நிற சாராரண ஆடையையே அணிய விரும்புகிறார். MILAN புது பாணி ஆடை வாரத்தை அவர் மீளாய்வு செய்து, செய்தியாளரிடம் கூறியதாவது—

"இந்த MILAN பயணத்தின் எதிரொலிப்பு மிக நன்றாக உள்ளது. நவ நாகரீக ஆடைகளின் சர்வதேச அரங்காக இத்தாலி விளங்குகிறது. கற்றுக் கொண்டு பரிமாற்றம் செய்யும் மனப்பான்மையுடன் முதல்முறையாக அங்கே சென்றோம்.

இத்தாலியின் புது பாணி ஆடைத் துறை நிபுணர்கள் சிலர் எமது வடிவமைப்புகளுக்கு வரவேற்பு அளித்துள்ளனர். சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த சில வடிவமைப்புகள் இத்தாலியின் கருத்தாக்கத்தில் இல்லை என்பதால், எமது வடிவமைப்புகளை அவர்கள் கண்டதும் சீனாவின் ஒரு வகை புத்தாக்கம் எனவும், உலக ஓட்டத்தின் நிலையை இவை பிரதிபலிக்க முடியும் எனவும் கருதுகின்றனர்" என்றார் அவர்.

1960ஆம் ஆண்டில் பிறந்த JI WEN BO, அரசு சார் தொழில் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்தார். பாடுபட்டு வேலை செய்த அவர், நுண்கலைத் திறன் கொண்டதால், படிப்படியாக, ஆடை வடிவமைப்புத் துறையில் நுழைந்தார். பின்னர், சிறப்பு ஆடை வடிவமைப்பாளராக மாறினார். சிறப்பான புரிந்துணர்வு மற்றும் தனித்தன்மை வாய்ந்த வடிவமைப்பு மூலம், உள்நாட்டில் புகழ்பெற்ற ஆடவர் ஆடை வடிவமைப்பாளராக JI WEN BO விளங்குகிறார்.

சீனாவில் தலைசிறந்த வடிவமைப்பாளர், சீனாவில் தலைசிறந்த ஆடவர் ஆடை வடிவமைப்பாளர் ஆகிய பெருமையை JI WEN BO பலமுறை பெற்றுள்ளார். சீன ஆடை வடிவமைப்பாளருக்கான அதியுயர் விருதான JIN DING விருதையும் அவர் வென்றுள்ளார்.

MILAN புது பாணி ஆடை வாரத்தில் காட்சிக்கு வைக்கப்பட்ட ஆடைகளை வடிவமைத்த JI WEN BOவின் படைப்பூக்கம், சீனாவில் 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறுடைய சுடுமண் படைவீரர் சிலைகளிலிருந்து வந்தது. இச்சிலைகள், சாம்பல், கறுப்பு ஆகியவற்றை, முக்கிய நிறங்களாகவும், சிவப்பு, துணை நிறமாகவும் கொண்டு விளங்குகின்றன. தமது புது பாணி ஆடைகளின் வெளியீட்டுக்கான ஏற்பாட்டில், பெய்ஜிங் இசை நாடகம், சீனாவின் வூ சு ஆகிய பாரம்பரிய பண்பாட்டு வடிவங்களை அவர் சேர்த்தார். இவையனைத்தும் மக்களுக்கு புத்துணர்வை ஊட்டியுள்ளன.

நீண்ட காலமாகவே, சீன ஆடை சின்னங்கள், மற்றவரின் வடிவமைப்பைப் போன்று தயாரிக்கப்பட்டவையே. சர்வதேச புது பாணி ஓட்டத்தின் மறு பிரதியான இவற்றில் புத்தாக்கம் இல்லை என்று சர்வதேச புது பாணி ஆடைத் துறையினர் சிலர் கருதி வந்தனர். ஆனால், JI WEN BO வடிவமைக்கும் ஆடைகளைக் கண்ட பின், அவர்கள் தங்களது கருத்தை மாற்றியுள்ளனர். JI WEN BO கூறியதாவது—

"இத்தாலிய புது பாணி ஆடைச் சங்கத்தின் தலைவர் Mario Boselli பெரும் வியப்பு அடைந்தார். இந்த வெளியீட்டுக் கூட்டத்தைப் பார்த்த பின், சீனாவின் வடிவமைப்பு, உலகில் உச்ச நிலை வடிவமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்றும், சீனத் தனிச்சிறப்பு, உலக ஆடவர் ஆடையின் வளர்ச்சி ஓட்டத்துக்கு வழிகாட்ட முடியும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்" என்றார் அவர்.

தற்போது, LI LANG புது பாணி ஆடை நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பாளராக JI WEN BO திகழ்கிறார். 2000ஆம் ஆண்டில் LI LANG நிறுவனத்துடன் JI WEN BO ஒத்துழைக்கத் துவங்கிய போது, சில பத்து கடைகளையும் 3 கோடி யுவான் ஆண்டு விற்பனைத் தொகையையும் இந்நிறுவனம் கொண்டிருந்தது. 2006ஆம் ஆண்டுக்குள், 2000 கடைகளையும் 500 முதல் 600 கோடி யுவான் ஆண்டு விற்பனைத் தொகையையும் கொண்ட நிறுவனமாக LI LANG நிறுவனம் மாறியது. LI LANG என்ற சின்னத்தி்ன் விரைவான வளர்ச்சி, இந்நிறுவனத்தில் JI WEN BO சேர்ந்ததுடன் நெருக்கமான தொடர்பு கொண்டது என்பது தெளிவு. LI LANG நிறுவனத்தின் தலைவர் WANG LIANG XINGகும், JI WEN BOவின் வடிவமைப்பை வெகுவாக பாராட்டுகிறார்.

ஆனால், தற்போதைய சாதனை பற்றி JI WEN BO மனநிறைவு அடையவில்லை.

"சீனாவின் வணிகச் சின்னங்களில் LI LANG மட்டுமல்லாமல், மேலும் அதிகமான உள்நாட்டுச் சின்னங்கள், சர்வதேச சந்தையில் நுழையும் திறனைக் கொண்டுள்ளன. தவிரவும், சீன ஆடை தயாரிப்புத் தொழிலும் நமது சின்னங்களும் கடந்த சில ஆண்டுகால வளர்ச்சியினால், சர்வதேசச் சந்தையில் நுழையும் திறனைக் கொண்டுள்ளன. சீனாவின் இதர வடிவமைப்பாளர்களுடன் இணைந்து, கூடிய விரைவில் சர்வதேச அரங்கில் நுழைந்து, சீனச் சின்னங்கள் வெகுவிரைவில் சர்வதேசச் சின்ன வரிசையில் சேர்வதற்கு மேலும் பெரும் பங்காற்ற வேண்டும் என்று விரும்புகின்றேன்" என்றார் அவர்.