• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-26 17:53:56    
வரமா? சாபமா?

cri

வடசீனாவின் எல்லைக்கு அருகே வாழ்ந்து வந்தார் ஒரு பெரியவர். தாவோயிச கொள்கைகளின்படி வாழ்ந்து, அதன் நெறிகளை பின்பற்றுபவர் என்று பலராலும் அறியப்பட்டவர் இவர். ஒரு முறை அவருடைய குதிரை ஒன்று என்ன காரணத்தினாலோ, வடப்குதி பழங்குடியின எல்லைப்புறத்திற்குள் ஓடிவிட்டது. இதை அறிந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பெரியவரிடம் வந்து துக்கம் விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆனால் தள்ளாத வயதில் இருந்த பெரியவரின் தந்தை, ஒருவேளை குதிரை இப்படி ஓடிச்சென்றதுமே கூட நல்லதுக்காகத்தான் இருக்கும். பிற்காலத்தில் இதற்கான நன்மை நம்மை வந்தடையக்கூடும் என்று கூறினார்.

சில மாதங்கள் கழிந்தன. பெரியவரின் ஓடிப்போன குதிரை, மீண்டும் வீடு திரும்பியது. உடன் ஒரு குதிரையையும் கூடவே அழைத்து வந்தது அந்த குதிரை. மிகச்சிறந்த ஒரு குதிரையாக இருந்த அந்த புதிய குதிரையின் வரவைக் கண்ட அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள், பெரியவருக்கு வாழ்த்து கூறி, அடட நீ கொடுத்து வைத்தர்தான் என்று பாராட்டி மகிழ்ந்தனர்.

ஆனால் பெரியவரின் வயதான தந்தையார் மட்டும்,
ஒருவேளை இது தீமைக்கு காரணமாக அமையக்கூடும். பிற்காலத்தில் இது இன்னல் ஏற்படுத்தக்கூடும் என்று கூறினார்.

பெரியவர் ஓரளவு வசதியாக இருந்தததால் அவர் வீட்டில் நிறைய குதிரைகள் இருந்தன. அவரது மகன் குதிரையேற்றத்தில் நாட்டம் ஏற்பட்டு, குதிரைச் சவாரியில் ஈடுபட்டான். ஒரு நாள் குதிரைச் சவாரியின்போது, கீழே விழுந்து, தனது தொடை எலும்பை முறித்துக்கொண்டான். இதை அறிந்த ஊர் மக்கள்,பெரியவரின் வீட்டுக்கு வந்து, என்ன இப்படி ஆகிவிட்டதே என்று துக்கம் விசாரிக்கத் தொடங்கினர்.

அவ்வேளையிலும் பெரியவரின் தந்தையார் மட்டும், இந்த சோகச் சம்பவம் கூட ஒருவேளை நன்மைக்காகத்தான் நடந்திருக்கும் என்றார்.

ஓராண்டு கழிந்தது. வடபகுதி பழங்குடியினத்தோர் எல்லைப்புறத்தில் மாபெரும் படையெடுப்பை மேற்கொண்டனர். எனவே வலுவான, நல்ல உடல்நலம் கொண்ட அனைவரும் இந்த படையெடுப்புக்கு எதிராக அணிதிரண்டு போர்புரிய அரசால் பணிக்கப்பட்டனர். எல்லைப்பகுதியில் போர் புரியச் சென்றவரில் 10ல் 9 பேர் பலியாயினர். ஆனால் பெரியவரின் மகன் தொடை எலும்பு முறிந்து படுத்துக்கிடந்ததால் போரில் கலந்துகொள்ள வாய்ப்பும் இல்லை, அவனை யாரும் வற்புறுத்தவும் இல்லை. எனவே பெரியவரின் மகன் உயிர் தப்பினான். பெரியவரின் தந்தை சொன்னது போலவே, தீமையில் நன்மை ஏற்படத்தான் செய்தது.