• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-25 14:27:58    
கல்வி மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில் நெல் பயிரிடும் துறையிலான நிபுணர்

cri

குளிர் பிரதேசத்தில் நெல்லை பயிரிடுவது என்ற கடினமான பிரச்சினையைச் சமாளித்து, இளம் வயதிலான கனவை நனவாக்க வேண்டும் என்று அவர் மனவுறுதி கொண்டார். பகலில் அவர் ஆய்வு வயலில் பார்வையிட்டு, இரவில் தகவல்களைத் தொகுத்தார். பல ஆண்டுகளின் ஆய்வுக்குப் பின், குளிர் பிரதேசத்தில் நெல்லை வளர்ப்பது பற்றிய தொழில் நுட்பத்தை அவர் கைப்பற்றினார்.


வெற்றி பெற்றவுடனே, அவர் இந்த தொழில் நுட்பத்தை உள்ளூர் விவசாயிகளுக்குக் கற்பித்தார். பண்ணையில் அவர்கள் இதனை பரவல் செய்வதற்கு வழிகாட்டினார். அவருடைய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, உள்ளூர் விவசாயிகள் அமோக நெல் விளைச்சல் பெற்று, படிப்படியாகச் செல்வம் அடைகின்றனர். விவசாயிகள் மனதிலிருந்து xu yi rongஐப் பாராட்டுகின்றனர். xu yi rong கூறியதாவது
நெல் பயிரிடும் விவசாயிகள் அடிக்கடி என்னை அவர்களின் வீட்டுக்கு வர அழைக்கின்றனர். பல விவசாயிகளின் குடும்பங்கள் கார்களை வாங்கின. நெல் வளர்ப்பதன் மூலம் கிடைத்த பணத்தால் காரை வாங்கினோம் என்று அவர்கள் கூறினார்கள். அவர்கள் என்னை உளமார பாராட்டி, அன்பாக உபசரிக்கின்றனர் என்றார் அவர்.


நிதானமான உயர்வான நெல் விளைச்சலை உத்தரவாதம் செய்யும் வகையில், நெற் பயிரில் பூச்சி பிரச்சினையைச் சமாளிக்கும் சிறப்பு வழிமுறையையும் அவர் கண்டறிந்தார். விவசாயி qu zong gui இந்த வழிமுறையைக் கண்டு வியந்து பாராட்டினார்.
திரு xu yi rong எனது நெல் வயலுக்கு வந்தார். நெற் பயிரில் சிறிய கட்டி மூலம் பூச்சி பிரச்சினையைத் தீர்த்தார். மிகவும் வியப்படைந்தோம். அனைவரும் அறிந்தது போல், மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். நெற் பயிர்களில் சிகிச்சை அளிப்பதைக் காண்பது இதுவே முதல் முறையாகும் என்றார் அவர்.


சிறந்த தொழி்ல் நுட்பத்தை மதிப்பிட, உயர் பரிசுகளைப் பெறுவதற்குப் பதிலாக, மக்களுக்கு அதிக நன்மை தருவது மிக முக்கியமானது என்று திரு xu yi rong அடிக்கடி கூறினார். அவர் தான் தொழில் நுட்பத்தை பரவல் செய்யும் நிபுணராவார். தமது ஓராண்டின் காலத்தை 3 பகுதிகளாகப் பிரித்து கொண்டார். ஒரு பகுதி, பல்வேறு பண்ணைகளுக்குச் சென்று தொழில் நுட்பத்தை பரவல் செய்து, நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு பாடம் அளிப்பது. 2வது பகுதி, நெல் வயல்களில் அறிவியல் ஆய்வு மேற்கொள்வது. 3வது பகுதி, தத்துவ ஆய்வில் ஈடுபட்டு, அறிவியல் ஆய்வு படைப்புகளை இயற்றுவது.
நெல் ஆய்வில் ஈடுபடுவதால், அவர் வீட்டில் தங்கும் நேரம் மிகவும் குறைவு. குழந்தைகள் இதர நகரங்களில் வேலை செய்கின்றனர். ஆகையில், அவருடைய துணைவியார் அடிக்கடி வீட்டில் தனியாக தங்க வேண்டியுள்ளது.


ஒரு முறை, எனது கணவர் வெளியூரில் நீண்ட காலமாக தங்கியிருந்தார். நீண்ட காலம் திரும்பாததால், தாய் மொழியில் பேச முடியாமல் போய்விடுவேன் என சொன்னேன் என்றார் அவருடைய துணைவியார்.
இருந்த போதிலும், xu yi rongஇன் பணிக்கு துணைவியார் பெரும் ஆதரவு அளிக்கின்றார். தற்போது, அதிக வயதான xu yi rong இன்னும் வயல்களில் ஆய்வு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றார். சீனாவின் நெல் பயிரிடும் விவசாயிகள் வளமான வாழ்வு பெறுவதற்கு அவர் பாடுபட்டு வருகின்றார். அவர் கூறியதாவது
மேலும் அதிகமான வருமானம் கிடைக்க விவசாயிகள் விரும்புகின்றனர். ஓரளவு வசதி படைத்த அவர்களது வாழ்க்கையை மேலும் மேம்படுத்த வேண்டும் என்று விரும்புகின்றேன் என்றார் அவர்