• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-25 14:37:00    
பெருந்துறை பல்லவி கே பரமசிவன்

cri

மக்கள் சீனம் நிகழ்ச்சி கேட்டேன். அரசு சாரா தொழில் நிறுவனங்கள் வேலை வழங்கி வருவதால் பலருக்கு வேலை கிடைக்கிறது. இதனால் அவர்களின் வாழ்க்கை நல்வழியில் செல்ல உதவியாக அமையும். எனவே அரசு சாரா நிறுவனங்களை பாராட்ட வேண்டும்.
........ இலங்கை யாழ்பாணம் ஈசன்


ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் வணிக உச்சி மாநாட்டின் துவக்க விழாவில் பொருளாதாரம், வர்த்தகம், எரியாற்றல், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் உள்ளிட்ட நடப்பு பிரதேசத்திலுள்ள முனைப்பான பிரச்சினைகள் குறித்து ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள், தொழில் மற்றும் வணிகத் துறையினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவற்றுக்கான தீர்வுமுறையை ஆராய உள்ளனர். சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் இவ்வுச்சி மாநாட்டின் துவக்க விழாவில் கலந்து கொண்டு, பன்முக ஒத்துழைப்பை முன்னேற்றி தொடர்ச்சியான வளர்ச்சியை நனவாக்குவது என்ற தலைப்பிலான சொற்பொழிவு நிகழ்த்தினார். உலக மற்றும் ஆசிய-பசிபிக் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து சீனாவின் நிலைப்பாட்டை அவர் விளக்கிக் கூறினார்.


தற்போதைய உலகப் பொருளாதாரத்தில் ஆழமான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன என்றும் ஆசிய-பசிபிக் பிரதேசம் மற்றும் உலகின் தொடரவல்ல எதிர்காலத்தைக் கூட்டாக உருவாக்குவதற்கும் 5 கருத்துக்களை முன்வைத்தார்.
1.உலகப் பொருளாதாரத்தின் சமமான வளர்ச்சியை மேம்படுத்துவது,
2.சீரான பல தரப்பு வர்த்தக அமைப்பு முறையை நிறுவுவது,
3.நிதானமான எரியாற்றல் வினியோகத்தை வழங்குவது,
4.சீரான இயற்கைச் சூழலை நிலைநிறுத்துவது,
5.அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கம் மற்றும் கல்வியை வளர்ப்பது,
மேலும், சீனாவின் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி நடைமுறைக்கு வந்த 29 ஆண்டுகளில் காணப்பட்ட மாபெரும் சாதனையையும் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கான அதன் பங்களிப்பையும் அவர் அறிமுகப்படுத்தினார். சீனப் பொருளாதாரத்தின் சீரான, நிதானமான வளர்ச்சி, 130 கோடி சீன மக்களுக்கு நன்மை பயப்பது மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பெரும் வணிக வாய்ப்புகளை வழங்கியுள்ளதை உண்மைகள் காட்டுகின்றன என்று அவர் கூறினார். உலகின் தொடரவல்ல வளர்ச்சிக்கு சீனா தொடர்ந்து பங்காற்றும் என்று அவர் கூறினார்.
..... மதுரை-20 ஆர். அமுதாராணி
உலகில் கட்டாய கல்விமுறையை நடைமுறைப்படுத்திய நாடுகளில் தலைசிறந்தது சீனா தான்.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சீன அரசு தீவிரம் காட்டிவருகிறது. இத்திட்டத்தின் படி கூடுதலான கல்விக் கட்டணம் தடைச் செய்யப்பட்டுள்ளது பள்ளிகளை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கை தடுக்கப்படுகிறது இது ஓரு
புரட்சிக்கரமான அற்புதமான திட்டம் இதனை நடைமுறைபடுத்துவதில் சீன அரசு வெற்றிப்பெற்று உலகில் முன்னனி நாடுகளின் வரிசையில் முதலிடம் பெறுவது திண்ணம்.

 
......... வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்
செப்டம்பர் திங்கள் 2 ஆம் நாள் இடம்பெற்ற 'மலர்ச்சோலை' நிகழ்ச்சியைக் கேட்டு மகிழ்ந்தேன்.
இதில் இடம்பெற்ற கடலடிக் கருவூலங்கள் பற்றிய தகவல்கள் என்னைப் பெரிதும் கவர்ந்தன. எடுத்துக்காட்டாக கூறப்பட்ட, கடலில் மூழ்கிய சில கப்பல்களில் இருந்த பொருட்களின் விலைமதிப்பு என்னை மிரள வைத்தது. அவ்வாறாயின், கடலில் இதுவரை மூழ்கியுள்ளதாக கருதப்பட்ட 30 லட்சம் கப்பல்களில் இருந்த பொருட்களின் மதிப்பு எவ்வளவு இருக்கும்? இப்பொருட்களை கொள்ளையடிக்கும் கும்பல் இன்னும் உருவாகாமால் இருப்பது வியப்புதான். இதுபோன்ற சுவையான தகவல்களை வழங்குவதற்கு என் நன்றி.