• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-25 14:48:59    
கடல் வழி பட்டுப்பாதை

cri

பட்டுப்பாதையின் பின்னணியும், வரலாறும் பற்றிய சில தகவல்களை கடந்த வாரம் சீனப் பண்பாடு நிகழ்ச்சியில் நாம் கேட்டோம். தரை வழி பட்டுப்பாதையை போன்றே கடல் வழியிலும் ஒரு பட்டுப்பாதை இருந்தது குறித்து முன்னரே அறிமுகப்படுத்தினோம். தென் கிழக்காசியா, தெற்காசியா, மேற்காசியா, ஐரோப்பா ஆகியவற்றின் பல தூதர்கள் பட்டு வாங்கவும், மற்ற வர்த்தகம் புரியவும், தூதாண்மை உறவுகளை வளர்க்கவும் அனுப்பப்பட்டனர். அவர்களில் பலர் பயன்படுத்திய பாதை இந்த கடல்வழி பட்டுப்பாதையே. கடல்வழி வர்த்தகத்தின் முக்கிய பொருளாக பட்டு, சீனாவிருந்து இதர நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. அக்காலத்தில் சீன அரசின் முக்கிய வருவாய்களில் ஒன்றாக அமைந்தது இந்த கடல்வழி பட்டுப்பாதை மூலமான வர்த்தகம்.


Tang வம்சம்/ Song வம்சம்/ yuan வம்சம் என பல வம்சங்களின் காலத்தில் Guang Zhou/ Ming zhou (Minbo) Quan Zhou ஆகிய கடலோர நகரங்களில் கடல்வழி போக்குவரத்து உள்ளிட்ட கடல்வழி விவகாரங்களுக்கு பொறுப்பான சிறப்பு ஆணையகங்கள் நியமிக்கப்பட்டிருந்தன.
இந்த ஆணையங்களின் முக்கிய பணிகளில், கடல்வழி போக்குவரத்தை மேற்பார்வையிடுதல், சீனாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு வர்த்தகத்துறையினருக்கு ஆள், அம்பு உதவி முதல் சிறப்பு கவனம் அளிப்பது வரை நன்றாக உபசரித்தல் ஆகியவை அடக்கம். இவ்வாறு இந்த கடல்வழி பட்டுப்பாதை கிழக்கையும் மேற்கையும் இணைத்ததோடு நட்பார்ந்த உறவுகளை வளர்க்கவும் உதவியது.


கடல் வழியோ தரைவழியோ, பட்டுப்பாதையின் தாக்கம் சீனாவில் மட்டுமல்ல, இதர ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் இருந்துள்ளதை அறிய முடிகிறது.
பட்டுப்பாதை சீனப்பட்டையும், இதர பொருட்களையும் கொண்டு செல்ல உதவியது மட்டுமல்லாது, சீனப் பண்பாட்டையும் இதர இடங்களுக்கு அறிமுகப்படுத்தியது கொண்டு சென்றது.
பட்டுப்பாதையின் ஊடாக பட்டு கொண்டு செல்லப்பட்டதன் மூலமே சீனா என்ற நாடு பற்றி மேற்குலகம் அறிந்து கொண்டது. Tang வம்சக்காலத்தில், நெசவு மற்றும் அலங்கர பூச்சு வேலைகளின் புதிய நுட்பங்கள் வளர்ந்தன, இதனால் சீனப் பட்டு தொழில் மேலும் புகழ் பெற்றது. மிங் வம்ச காலத்துக்கும் தாங் வம்சக்காத்தை போலவே விலை உயர்ந்த, சிறப்பான பல்வகை பட்டாடைகளும், பட்டுப்பொருட்களும் தயாரிக்கப்பட்டன. சீனப் பட்டின் தரத்துக்கென உலகெங்கும், குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் பெரும் வரவேற்பு இருந்தது. கி.பி. முதலாம் நூற்றாண்டு வாக்கிலேயே ரோமாபுரியின் வெர்ஜில் என்ற கவிஞர் "பூக்களை விட புத்துணர்ச்சி கொண்டது.

சிலந்திவலைகளை விட நுட்பமானது" என்று சீனப்பட்டை வர்ணித்துள்ளார். சீனப் பட்டுப்பொருட்களின் தொடர்ச்சியான ஏற்றுமதியால் மேற்குலகம் சீனப் பட்டை பற்றி மட்டுமல்லாது சீனாவை பற்றியும் நன்கு அறிந்து கொண்டது. மிங் வம்சக்காலத்தில் மிகவும் லாபகரமான பரந்த அளவில் விநியோக்கப்பட்ட ஏற்றுமதி பொருளாக பட்டு விளங்கியது.