2002ஆம் ஆண்டு முதல், சீனாவில் நகரமயமாக்க போக்கு விரைவாகி வருகின்றது. 2006ஆம் ஆண்டு, நாடு முழுவதிலுமுள்ள நகரங்களில் மக்கள் தொகை, 57 கோடியே 70 லட்சத்தைத் தாண்டியுள்ளது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில், இது, 40 விழுக்காடு வகிக்கின்றது. சீனத் தேசிய புள்ளி விபர பணியகம் இன்று வெளியிட்ட "சீனப் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி மீளாய்வு அறிக்கை" இதை சுட்டிக்காட்டியது. இந்த அறிக்கையின் படி, சீன நகரங்களின் பொருளாதாரம், தொடர்ச்சியாகவும் விரைவாகவும் வளர்ந்து வருகின்றது. போக்குவரத்து வசதி நாளுக்கு நாள் மேம்பட்டு வருகிறது. அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில் விரைவாக வளர்ச்சியடைந்து வருகின்றது. நகரங்களில், பசுமையான சூழல் படிப்படியாக உருவாகி வருகிறது. இதற்கிடையில், சமூக உத்தரவாத முறைமை இடைவிடாமல் மேம்பட்டுள்ளது. பொதுச் சேவை மேலும் வலுப்பட்டுள்ளது. கல்வி, பண்பாடு, விளையாட்டு, பொழுது போக்கு ஆகிய லட்சியங்கள் முன்னேற்றமடைந்து வருகின்றன. பொது இடர்காப்பு சிறந்த நிலையில் இருக்கின்றது. நகரவாசிகளின் பாதுகாப்பு உணர்வு வலுப்பட்டுள்ளது.
|