• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-27 11:23:12    
சுற்றுலாச் செலவைச் சிக்கனப்படுத்தும் முறைகள்

cri
வருகின்ற அக்டோபர் முதல் நாள், சீனாவின் தேசிய விழாவாகும். இதைக் கொண்டாடும் வகையில், சீன அரசு 7 நாள் விடுமுறையை அறிவித்துள்ளது. அது, தங்க வாரம் எனப்படுகின்றது.
இந்தத் தங்க வாரத்தில் மக்கள் பலர் சுற்றுப் பயணம் மேற்கொள்வது வழக்கம். சுற்றுலா செல்ல விரும்புவோருக்கு உதவும் வகையில், இங்கு சில ஆலோசனைகளை வழங்குகிறோம்.
சுற்றுலா நெறி:ஏற்ற சுற்றுலா தலங்களைத் தேர்ந்தெடுப்பது, பயணத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாகும். தங்க வாரத்தின் போது, பிரபலப் பயண தலங்களுக்கு மக்கள் திரள்திரளாகச் செல்லுவர். இதனால், தங்கு விடுதிக்கான கட்டணம், வழக்கமான நாட்களை விட, அதிக அளவில் உயரும். எனவே, பிரபலமற்ற பயண தலங்களைத் தெரிவு செய்வது மேல். போதிய பணம் உண்டு என்றால், வெளிநாட்டுக்குச் சென்று பயணம் மேற்கொள்ளலாம். சுருங்கக் கூறின், உள்நாட்டின் பயண உச்ச நிலை காலத்தைத் தவிர்க்க வேண்டும். அமைதியான இடத்துக்குச் சென்று விடுமுறையைக் கழிப்பது, பகுத்தறிவு வாய்ந்த தெரிவு ஆகும்.
சிறப்பு முன்மொழிவுகள்:பிரபலச் சுற்றுலா தலங்களைத் தேர்ந்தெடுக்க விரும்பினால், நீங்கள் பயணத் தேதியை ஒத்திப்போடுவது நல்லது. தங்க வாரத்தின் முதல் 2 நாட்களில், சுற்றுலா இடத்துக்குச் செல்லக் கூடாது.
போக்குவரத்து:சுற்றுலா தலங்களின் படி, போக்குவரத்து நெறிகளை முடிவு செய்வது. பயணச் செலவின் பெரும் பகுதி, போக்குவரத்துக் கட்டணத்திற்குச் செலவிடப்படுகிறது. இக்கட்டணத்தைச் சிக்கனப்படுத்தினால், முழுப் பயணச் செலவு பெரிதும் குறைக்கப்படும்.
சிறப்பு முன்மொழிவுகள்:
முதலாவது, தொடர் வண்டியைத் தேர்ந்தெடுப்பது. ஏனென்றால், தொடர் வண்டியின் கட்டணம் குறைவாக இருக்கின்றது. அத்துடன், இரவு நேரங்களில், தொடர் வண்டியில், தூங்கலாம். நேரத்தையும் சிக்கனப்படுத்தலாம்.
இரண்டாவது, வாடகை காரைத் தெரிவு செய்வது. ஒரு வாடகை காரில், 4 பேர் செல்லலாம். இதற்கான கட்டணத்தை அவர்கள் பகிர்ந்து கொள்வர்.
தங்கு விடுதி:அறையை முன்பதிவு செய்ய வேண்டும். தங்கு விடுதி, சுற்றுலாவின் முக்கியப் பகுதியாகும். எனவே, அறையை முன்பதிவு செய்தால், பயணக் கட்டணத்தைக் குறைக்கலாம்.