• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-27 17:22:30    
சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீப தொடர் ஓட்டம்

cri

2007ஆம் ஆண்டு ஷாங்காய் உலக கோடைக்கால சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபத் தொடர் ஓட்டத்தின் துவக்க விழா இன்று தேவலோக கோயிலின் Qi Nian Dian எனும் கட்டிடத்தின் முன்னால் நடைபெற்றது.
இவ்விழாவில், பெய்சிங் மாநகர மேயர் Wang Qi Shan, அன்னிய சட்ட நடைமுறையாக்க பணியாளர் ஒருவரின் கையிலிருந்து, சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தீபத்தை பெற்றுக் கொண்டு, தீப பீடத்தை ஏற்றினார். இந்த தீபம் கிரேக்க Athens நகரில் எரியூட்டப்பட்டு, உலகின் 5 கண்டங்களில் பயணம் செய்தது.
இதற்குப் பின், Qi Nian Dianயிலிருந்து, உழைப்பாளர் பண்பாட்டு மாளிகை, தியென் ஆன் மென் சதுக்கம் உள்ளிட்ட புகழ் பெற்ற தலங்களினூடாக, இந்த தீபம் Shi Cha Hai குடியிருப்புப் பிரதேசத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
சட்ட நடைமுறையாக்கப் பணியாளர் தீபத் தொடர் ஓட்டம், உலக சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் சிறப்பு தனித்தன்மை வாயந்த நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். சிறப்பு ஒலிம்பிக் எழுச்சியைப் பிரச்சாரம் செய்து, மன வளர்ச்சி குன்றியோர் மீதான அன்பை வெளிப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.