• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-27 13:35:14    
தென்சியௌபிங் தத்துவம்

cri

 

கலை........இன்றைய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் மூன்றாவது தலைப்பு பற்றி விவாதிக்கலாம்.

தமிழன்பன்........எந்த அம்சம் பற்றி விவாதிக்க போகிறோம்.

கலை........ தமிழன்பன் நீங்கள் சீனாவுக்கு வருவதற்கு முன் தெங்சியௌபிங் பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா?

தமிழன்பன்.......தெங்சியௌபிங் என்பர் மகத்தானவர். சீனாவில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள சீர்திருத்த மற்றும் வெளிநாட்டு திறப்புத் துறை இம்மாமனிதரால் தோற்றுவிக்கப்பட்டது. அல்லவா?

கலை........ஆமாம். அப்புறம் அன்னாருடைய தத்துவம் பற்றி நீங்கள் அறிந்து கொண்டுள்ளீர்களா?

தமிழன்பன்.......இல்லை. கலை எனக்கு தெரியாது. எனக்கும் நேயர்களுக்கும் நீங்கள் விளக்கிக கூறுங்களேன்.

கலை.........மகிழ்ச்சி. தெங்சியௌபிங் தத்துவம் என்று கூறினால் சீனத் தனிச்சிறப்பியல்பு மிக்க சோஷலிசத்தை நிர்மாணிப்பது என்பதாகும். தென்சியௌபிங்கின் தத்துவம் சுருக்கச் சொல்லலாம்.

தமிழன்பன்....... தெங்சியௌபிங்கை பிரதிநிதியாக கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் சோஷலிசத்தை கட்டியமைப்பதில் எத்தகைய பங்கு ஆற்றியுள்ளனர்?

கலை......சோஷலிசக் கட்டுமான காலகட்டத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் நவ சீனா நிறுவப்பட்ட பின் சோஷலிசக் கட்டுமானம் சந்தித்த அனுபவங்களையும் படிப்பினைகளையும் தொகுப்பதன் அடிபடையிலும் சர்வதேச அனுபவங்களையும் உலகின் நிலைமையை ஆராய்ந்த அடிப்படையிலும் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டு திறப்பு என்ற புத்தம் புதிய நடைமுறையிலும் சீனாவுக்கு ஏற்ற சோஷலிச கட்டுமான பாதையை உருவாக்கினர். இதன் மூலம் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்பு, சோஷலிச நவீன மயமாக்க கட்டுமானம் ஆகியவற்றில் மாபெரும் சாதனைகளை பெற்றுள்ளனர்.

தமிழன்பன்........இந்த நடைமுறையாக்கத்தின் மையம் தெங்சியௌபிங் தத்துவம்

 தானா?

கலை.......ஆமாம். சிந்தனையை விடுதலை செய்து சான்றுகளிலிருந்து உண்மையை தேடுவதென்ற சிந்தனை நெறியில் ஊன்றிநிற்கும் தெங்சியௌபிங் தத்துவம் "சோஷலிசம் எதை குறிக்கின்றது"என்பதற்கும் பொருளாதாரப் பண்பாடு பின்தாங்கிய சீனாவில் சோஷலிசத்தை எவ்வாறு நிர்மாணிப்பது என்பது உள்ளிட்ட பல அடிப்படை பிரச்சினைகளுக்கும் முதல் முறையாக ஒழுங்கான முறையில் பதிலளிக்கின்றது. புதிய சிந்தனையில் புதுக் கருத்தோடு தெங்சியௌபிங் அவர்கள் மார்க்சிஸம் லெனினிசம் மற்றும் மாசேதுங் சிந்தனையை மேம்படுத்தி வெளிக்கொணர்ந்தார்.

தமிழன்பன்........ தெங்சியௌபிங் தத்துவம் நவ சீனாவின் மார்க்சிஸமாகும். தெங்சியௌபிங் தத்துவம் சீனத் தனிச்சிறப்புமிக்க மார்க்சிஸத்தின் வளர்ச்சியாகும்.

கலை.......ஆமாம். தெங்சியௌபிங் தத்துவம் சீன மக்கள் நடைமுறையில் சேகரித்துள்ள அனுபவம் மற்றும், கூட்டு விவேகத்தின் விளைவு ஆகும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் சீனத் தனிச் சிறப்பியல்பு மிக்க சோஷலிசத்தை கட்டியமைப்பதற்கு வழிகாட்டும் வழிமுறையாக இது திகழ்கின்றது.

தமிழன்பன்....... தெங்சியௌபிங் எந்த ஆண்டில் பிறந்தார்?

கலை....... தெங்சியௌபிங் 1904ம் ஆண்டில் பிறந்தவர். 1997ம் ஆண்டில் அவர் காலமானார். நவசீனாவின் இரண்டாவது தலைமுறை தலைமை பீடத்தின் மையப் பிரமுகர்களில் தெங்சியௌபிங் ஒருவராவார்.

தமிழன்பன்........ தெங்சியௌபிங் சீனாவின் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்பின் சிற்பியாக அழைக்கப்படுகிறார்.