• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-27 14:05:16    
ஹெனான் மாநிலத்தின் யுன் தேய் மலை

cri

சீனாவில் மக்களை ஈர்க்கும் ஆற்றல் மிக்க இயற்கைக் காட்சி மண்டலங்கள், அதிகமாக உள்ளன. இதில், ஹெனான் மாநிலத்து சியோ சுவோ நகரத்தின் சியுவூ மாவட்டத்திலுள்ள யுன் தேய் மலையின் காட்சி மண்டலம், குறிப்பிடத்தக்கது. சுமார் 200 கிலோமீட்டர் பரப்பளப்புடைய இந்த இயற்கைக் காட்சி மண்டலம், யுனெஸ்கோ உறுதிப்படுத்திய உலக முதல் தொகுதி புவியியல் பூங்காக்களில் ஒன்றாகும். இங்கே மலைத் தொடர்கள் அதிகம், மலைகளி்ல் நீரூற்றுக்கள் கண்கொள்ளா காட்சியாகும்.


யுன் தேய் மலையில், நீரூற்றுக்கள், மலைகளை மறைத்து விட்டன என கொள்ளலாம். மூன்று அடி தொலைவில் ஒரு நீரூற்றும், ஐந்து அடி தொலைவில் ஒரு நீர்வீழ்ச்சியும், பத்து அடி தொலைவில் ஒரு குளமும் இருக்கின்றன. இங்கே வருகின்ற பயணிகள், மலைப் பிரதேசத்திலுள்ள தங்குவிடுதி வீட்டில், சில நாட்கள் தங்கி மகிழ்கின்றனர். மலைகளிலுள்ள இந்தத் தங்குவிடுதி வீடுகளில், எளிமையான அறைகளில், பயணிகள், தூய்மையான அருமையான வாழ்க்கையை உணர்கின்றனர். திரு வாங் சியேன் பாஃன், யுன் தே மலைக்கு சில முறைகள் வந்து, சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஒவ்வொரு முறையும் தங்குவிடுதி வீடுகளில், தங்குகின்றார். அவர் கூறியதாவது:
நான் இரண்டு அல்லது மூன்று முறைகள் இங்கே வந்துள்ளேன். இந்தத் தங்குவிடுதி வீடுகளின் வசதிகள் நல்லது. செலவோ குறைவு. பல நண்பர்களுக்கு இதை பற்றி சொன்னேன். அவர்களும் வந்து பார்க்க விரும்புகின்றனர் என்றார் அவர்.
யுன் தேய் மலையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, மலைகளை உன்னிப்பாக பார்க்க வேண்டும். கடல் மட்டத்திலிருந்து 1300 மீட்டர் உயரமுள்ள சூ யூ சிகரம், இதில் மிகவும் உயரமான மலைச் சிகரமாகும். இங்குள்ள படிகளில் ஏறும் போது, மேகங்கள் நம் அருகே மிதந்து செல்வது போல் தோன்றும்.

 
யுன் தேய் மலைக் காட்சி மண்டலத்தின் பரப்பளப்பு மிகவும் பெரியது. பயணிகள், ஒரு காட்சி இடத்தைப் பார்ப்பதற்கு, ஏறக்குறைய முப்பது நிமிடம் முதல், இரண்டு, மூன்று மணி நேரம் வரை, தேவைப்படலாம். காட்சி மண்டலத்தை முழுமையாக பார்வையிட, மேலும் அதிகமான நேரம் தேவை. பல்வேறு காட்சி இடங்களுக்கு செல்லும் நேரத்தைக் குறைக்கும் பொருட்டு, இலவச தூய்மை கேடற்ற சுற்றுலாப் பேருந்துகளை, இக்காட்சி மண்டலம் வழங்குகின்றது. பயணிகளுக்கு வசதி வழங்கும் வகையில், ஒவ்வொரு சேவை பிரதேசங்களிலும் ஒத்த குறியீடுடைய பேருந்து நிலையம் மற்றும் காட்சி மண்டல சுற்றுலா வரைபடம் ஆகியவை உள்ளன. யுன் தேய் மலை, காட்சி மண்டலத்தின் நுழைவுச்சீட்டை, இரு நாட்கள் பயன்படுத்தப்படலாம் என்று, இம்மண்டல நிர்வாக அலுவலகத்தின் துணைத் தலைவர் லீ ஜீயே கூறினார்.
பயணிகளின் தேவையை போதியளவில் கருத்தில் கொள்ளும் இந்த அமைப்பு முறை, பெரிதும் வரவேற்கப்படுகிறது. சான் தூங் மாநிலத்தின் பயணி சொங் லின் எமது செய்தியாளரிடம் பேசுகையில், இரண்டு நாட்கள் பயன்படுத்தக்கூடிய நுழைவுச் சீட்டு, வசதியாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது என்று தெரிவித்தார். அவர் கூறியதாவது:
இந்தக் காட்சி மண்டலம் மிகவும் பெரியது. ஒரு நாளில், சுற்றுப்பயணம் மேற்கொள்ள மேரம் போதாது. இத்தகைய நுழைவுச்சீட்டைப் பயன்படுத்தி, இன்னொரு நாள் தொடர்ந்து வந்து பார்க்க முடிகிறது. இவ்வமைப்பு முறை, வசதியாக இருக்கிறது என்றார் அவர்.


யுன் தேய் மலையில் காட்சி இடங்கள் மிகவும் அதிகம். நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் இங்கு இஙகே வருகை தந்து சுற்றுலா மேற்கொள்கின்றனர். காட்சி மண்டலத்தில், சிறப்பு குறியீட்டு அட்டை, முன்னெச்சரிக்கை அட்டை, காட்சி இடத்துக்கான அறிமுக அட்டை ஆகியவற்றை அனைத்து இடங்களிலும் காணலாம். ஒவ்வொரு அட்டையிலும், சீனம், ஆங்கிலம், கொரியா, ஜப்பான் ஆகிய 4 மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. இது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு வசதியை வழங்குகிறது. இம்மண்டல நிர்வாக அலுவலகத்தின் துணைத் தலைவர் லீ ஜீயே கூறியதாவது:
வெளிநாட்டு பயணிகள், எமது காட்சி மண்டலத்தில் தங்களுடைய வழிகாட்டியை தவறாக பிரிய நேர்ந்தாலும், வழிகாட்டு அட்டை மூலம், விரைவாகவும் வசதியாகவும் தமது குழுவை, சென்றடையலாம் என்றார் அவர்.
யுன் தேய் மலையின் எண்ணியல் காட்சி மண்டலக் கட்டுப்பாட்டு நிர்வாக மையத்தில், கண்காணிப்பு அமைப்பு முறையில், பல்வேறு காட்சி இடங்களும் முக்கிய வழிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தக் கண்காணிப்பு அமைப்பு முறையைப் பயன்படுத்தி, மேலாண்மை வாரியம், காட்சி இடங்களில் பயணிகளின் எண்ணிகையின் படி, சுற்றுலா பேருந்துகளையும் சேவையாளர்களையும் கையாளமுடியும். பயணிகள் வழிதவறி போனாலும், இவ்வமைப்பு முறை, உடனடியாக பயணிகள் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து, அவசர வானொலி வசதி மூலம் அறிவித்து, வழி தவறி போன பயணிகளின் குழுவினரைத் தேட முடிகிறது.


தவிர, காட்சி இடங்களின் நுழைவாயிலில், ஓய்வு தாழ்வாரங்கள் பல உள்ளன. நுழை வாயிலில், பயணிகள் சேவை மையம், பயணிகளின் பொருட்களை இலவசமாக பத்திரப்படுத்தி வைத்திருக்கும் சேவையை வழங்குகிறது. யுன் தேய் மலை காட்சி மண்டலத்தில் இத்தைகய வசதிகள், மிகவும் அதிகம். மலேசிய பயணி HUANG WEI SEN இக்காட்சி மண்டலத்தின் சேவை குறித்து, மனநிறைவு தெரிவித்தார். அவர் கூறியதாவது:
இக்காட்சி மண்டலம், நன்றாக இருக்கிறது. இயற்கைக் காட்சி, மிகவும் அழகானது. சுற்றுச்சூழல் தூய்மையாக உள்ளது. இங்கே சுற்றுப்பயணம் மேற்கொள்வது மிகவும் சுகமானது என்றார் அவர்.
நேயர்களே, சீனாவுக்கு வரும் போது, யுன் தேய் மலை சென்று, அழகான இயற்கைக்காட்சிகளையும் வசதியான சேவையையும் தாராணமாக அனுபவித்து கொள்ளுங்கள்.