• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-28 15:26:08    
சீனாவின் பைய் இனம்

cri

பைய் இனம், சீனாவின் தென்மேற்குப் பகுதியிலான நீண்ட வரலாறும் பண்பாடும் வாய்ந்த சிறுபான்மை தேசிய இனமாகும். பைய் இன மக்கள், முக்கியமாக யுன் நான் மாநிலத்தின் தாலி பைய் இனத் தன்னாட்சி மாவட்டத்திலும், lj jiang, bi jiang, nanhua, kunming, anning முதலிய இடங்களிலும் வாழ்கின்றனர். 2000ம் ஆண்டில் நடைபெற்ற 5வது மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பைய் இன மக்கள் தொகை, 18 லட்சத்து 58 ஆயிரமாகும். அவர்களில் பெரும்பாலோர் பைய் மொழி பேசுவதோடு ஹான் மொழியையும் பொதுவாகப் பயன்படுத்துகின்றனர்.

 

1956ம் ஆண்டின் டிசம்பர் திங்களில், தாலி பைய் இனத் தன்னாட்சி மாவட்டம் நிறுவப்பட்டது. நவ சீனா நிறுவப்பட்ட 56 ஆண்டுகளாக, குறிப்பாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 11வது மத்திய கமிட்டியின் 3ம் முழு அமர்வு நடைபெற்ற பின், இங்கு தொழிற்துறை மற்றும் வேளாண் உற்பத்தி, விரைவாக வளர்ந்து வருகிறது. இப்பிரதேசத்தின் தலைநகர் xia guan,மேற்கு யுன் நான் மாநிலத்தின் முக்கிய தொழிற்துறை நகரமாக மாறியுள்ளது. மின்னாற்றல், இயந்திரம், வாகனம் செப்பனிடல், வேதியியல், தாள் உற்பத்தி, நெசவு, தோல் முதலிய தொழிற்துறைகள் இங்கு உருவாகியுள்ளன. அனைத்து கிராமங்களும், நெடுஞ்சாலைகாளால் இணைக்கப்படுகின்றன. கல்வியும் மருத்துவ சிகிச்சையும் பெரிய முன்னேற்றமடைந்துள்ளன.

பைய் இன மக்கள் கலைத் துறையில் தேர்ச்சி பெற்றவர்களாவர். அவர்களில் கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை முதலியவை உலகில் புகழ் பெற்றவை.

பைய் இனத்திற்கு ஒருவருக்கு ஒடுத்தி என்ற திருமண அமைப்பு முறை மேற்கொள்ளப்படுகிறது. பெற்றோர், இளைய மகனுடன் வாழ்வது வழக்கம். பெற்றோர் ஏற்பாட்டின்படி இளைஞர்கள் திருமணம் செய்கின்றனர். திருமணத்திற்கு இரு தரப்பின் பொருளாதார நிலைமையும் சமூகத் தகுநிலையும் ஒத்ததாக இருக்க வேண்டும்.

San yue jie அல்லது guan yin shi என்ற விழா, பைய் இன மக்களின் மாபெரும் திரு நாளாகும். சந்திர நாள் காட்டியின்படி, ஆண்டுதோறும் மார்ச் திங்களின் 15-20ஆம் நாட்களில் da li நகரத்தின் dian cang மலையடிவாரத்தில் இவ்விழாவைக் கொண்டாடுகின்றனர். முன்பு இவ்விழா மதம் சார்ந்த நடவடிக்கையாகும். நவ சீனா நிறுவப்பட்ட பின்,san yue jie திருநாள், ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் பொருள் பரிமாற்ற விழாவாக இனத்தின் விளையாட்டு மற்றும் கலை மாநாட்டு மாறியுள்ளது.