
சிங்காய்-திபெத் இருப்புப்பாதை நெறியில் உள்ள Na Qu சரக்கு போக்குவரத்து மையத்தின் கட்டுமானம் துவங்கும் மாநாடு இன்று Na Qu தொடர் வண்டி நிலையத்தின் சதுக்கத்தில் நடைபெற்றது. மொத்தம் 150 கோடி யுவான் முதலீட்டுத் தொகையுடன், இச்சரக்கு போக்குவரத்து மையம் கட்டிமுடிக்கப்பட்ட பின், திபெத்தில் மிகப் பெரிய சரக்கேற்றிச்செல்லும் தளமாகவும், சீனாவில் முதற்தர நவீனமயமாக்க சரக்கு போக்குவரத்து மையமாகவும் மாறும். கடல் மடத்திலிருந்து 4500 மீட்டர் உயரத்திலுள்ள Na Qu தொடர் வண்டி நிலையத்தின் இரு பக்கங்களில் இம்மையம் அமைந்துள்ளது. சுமார் 52 லட்சம் சதுர மீட்டர் நிலப்பரப்புடைய இம்மையம், 15 திங்களுக்குள் கட்டியமைக்கப்படும். திட்டத்தின் படி, 2007ஆம் ஆண்டு, இம்மையத்தின் மூலம் 6 லட்சம் டன் சரக்கு ஏற்றிச்செல்லப்படும். 2020ம் ஆண்டு, இந்த அளவு, 31 லட்சம் டன்னை எட்டக்கூடும்.
|