இன்றைய சீன மகளிர் நிகழ்ச்சியில், நாம் உள் மங்கோலியாவின் வட பகுதியிலுள்ள சிலிகோரே வட்டத்துக்குச் சென்று, அங்கே வாழ்கின்ற சில மங்கோலிய பெண்மணிகளை அறிந்து கொள்வோம். 20 வயதுக்கு மேற்பட்ட தோடா என்பவர், நல உடலும் சிவப்பான முகமும் கொண்டவராவார். ஆயர் பிரதேசத்தை நன்றாக அறிந்துக் கொள்ள அவரை அழைத்து அவரது அன்றாட வாழ்கையை பற்றி விளக்கி கூறுமாறு கேட்டோம். அவர் எமது சீன மொழியை அறிந்திபுந்க போதிலும், மங்கோலிய மொழியில் பதிலளித்தார். அவர் கூறியதாவது
நாள்தோறும் காலையில் 5 மணிக்கு கண் விழித்து குடும்பத்தினருக்கு தேவையான பால் தயாரிப்பு உள்ளிட்ட உணவுகளை சமைக்க துவங்குகிறேன் பின்னர், இரண்டு மணிக்கு ஒருமுறை குதிரையிலிருந்து பால்கறக்க வேண்டும், ஒரு நாளில் மொத்தம் 6 முறை செய்ய வேண்டும் என்றார் அவர். இத்தகைய குடும்ப பணியை, திருமணம் செய்வதற்கு முன் அவரால் நன்றாக செய்ய முடிந்தது. தற்போது, அவர் தனது 6 வயது சிறிய மகனை கவனிப்பதோடு, முழு குடும்பத்துக்கும் நாள்தோறும் சேவை செய்ய வேண்டும்.
உள்மங்கோலியத் தன்னாட்சி பிரதேசத்தின் புல்வெளியில், டோயாவை போன்ற பெண்மணிகள் அதிகமாக இருக்கின்றனர். ஆனால், உள்ளூரின் சமூக மற்றும் பண்பாட்டு வளர்ச்சியுடன், மென்மேலும் அதிகமான மங்கோலிய பெண்மணிகள், ஆயர் பிரதேசத்தின் உற்பத்தி பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் சிலர் பெரும் முன்னேற்றம் பெற்றுள்ளனர். னேர்தேபௌலிக்காச்சா கிராமத்தின் தலைவரும், கிராமத்திலுள்ள கம்யூனில்ட் கட்சி இளையின் செயலாளரும், பெண்மணி ஆவர் என்று நான் கேள்விவிடப்பட்டபின் அவர்களை சந்தித்து பேட்டி காண சென்றோம்.
|