சீனாவின் பல்வேறு இடங்களில், தானிய போக்குவரத்து வசதிகளின் கட்டுமானம் பன்முகங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தானிய சந்தை முறைமை மற்றும் தானிய பாதுகாப்பில் இது ஒரு முக்கிய பகுதியாகும். சீனத் தேசிய தானிய ஆணையம் அண்மையில் வெளியிட்ட புள்ளி விபரங்களின் படி, கடந்த மே திங்கள் இறுதி வரை, 300க்கு அதிகமான தானிய போக்குவரத்து வசதி திட்டப்பணிகள் துவங்கியுள்ளன, அல்லது துவக்கக் கட்ட பணியை நிறைவேற்றியுள்ளன. இப்புள்ளி விபரங்களின் படி, தானிய கிடங்கு, துறைமுகம், தானிய போக்குவரத்து மையம், பன்நோக்க மண்டலம் முதலியவை, தானிய போக்குவரத்து வசதிகளில் இடம்பெறுகின்றன. இவ்வசதிகளின் கட்டுமானத்துக்கென, மொத்தம் 4680 கோடி யுவானை முதலீடு செய்ய சீன அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் இது வரை, 668 கோடி யுவான் மதிப்புள்ள முதலீடு செய்யப்பட்டுள்ளது.
|