• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-09 15:11:25    
சோயா பால்

cri

வாணி -- க்ளீட்டஸ், கடந்த வாரம் திருச்சி அண்ணாநகர் வி.டி ரவிச்சிந்திரன் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார்.

க்ளீட்டஸ் -- மின்னஞ்சலில் அவர் என்ன கூறியிருந்தார்?

வாணி -- அவர் ஒரு சீன உணவின் தயாரிப்பு பற்றி கேட்டிருந்தார். 2 ஆண்டுகளுக்கு முன், சிறப்பு நேயர் என்ற முறையில் அவர் சீனாவுக்கு வந்திருந்தார். சீனாவில் பல்வகை உணவு வகைகள் அவருடைய மனதில் ஆழமாக பதிந்துள்ளன.

க்ளீட்டஸ் -- அப்படியா?சீனாவில் ருசிப்பார்த்த உணவு வகைகளில் சிலவற்றை பற்றி அவர் கேட்டுள்ளார் என்று நினைக்கின்றேன்.

வாணி -- ஆமாம். அவர் சோயா பால் தயாரிப்பு முறை பற்றி கேட்டார். இதற்கிடையில், இவ்வாண்டு சீனாவில் பயணம் செய்த போது பாண்டிச்சேரி என்.பாலகுமாருக்கும், சோயா பாலை மிகவும் பிடிக்கிறது என்பதைக் கண்டுபடித்தேன்.

க்ளீட்டஸ் -- இப்படி என்றால், இன்று சோயா பால் பற்றி நேயர்களுக்கு அறிமுகப்படுத்தலாமே.

வாணி -- சரி. முதலில், இதற்குத் தேவையான பொருட்கள் பற்றி நான் சொல்கின்றேன்.
காய்ந்த சோயா அவரை 30 கிராம்
தண்ணீர் 3 கோப்பை
சர்க்கரை போதிய அளவு
கலவை இயந்திரம்

வாணி -- முதலில் சோயா அவரையை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். இவற்றைத் தண்ணீரில் 10 மணி முதல் 15 மணி மேரம் ஊற வைக்க வேண்டும்.

க்ளீட்டஸ் -- எனவே, நீங்கள் சோயா பாலைத் தயாரிப்பதற்கு முந்திய நாளில் இவ்வாறு ஏற்பாடு செய்தால், நல்லது.

வாணி -- நான் வீட்டில் தயாரிக்கும் போது, முந்திய நாளிரவு சோயா அவரையை சுத்தம் செய்து தண்ணீரில் ஊற வைக்கின்றேன். ஒரு இரவு முழுதும் தண்ணீரில் போட்டால், அடுத்த நாள் காலையில் சோயா பால் தயாரிப்பதற்கு மிகவும் எளிதானது.
கலவை இயந்திரத்தில், நில் 10 மணி நேரம் ஊற வைக்கப்பட்டசோயா அவரை போட்டு, அதில் சுமார் அரை கோப்பை தண்ணீர் ஊற்ற வேண்டும். பிறகு, இந்த கலவை இயந்திரத்தில் நன்றாக அரைக்க வேண்டும். விரைவில் வெள்ளை நிறமான சோயா பால் கிடைக்கலாம்.

க்ளீட்டஸ் -- சோயா பால் தயாரா?இப்போது குடிக்க முடியுமா?

வாணி -- அவரசம் வேண்டாம். இப்போது குடிக்கக் கூடாது. நீங்கள் அடுப்பின் மீது வாணலியை வைத்து, இந்த சோயா பாலை ஊற்றி, மேலும் எஞ்சிய 2 கோப்பை தண்ணீரை ஊற்ற வேண்டும். பிறகு, நன்றாக கொதிக்க வையுங்கள். இது கவனத்துக்குரியது. பச்சை சோயா பால் குடிக்கக் கூடாது. இது நச்சு தன்மை வாய்ந்தது. நன்றாக கொதிக்க வைக்கப்பட்ட பிறகு தான், நச்சு தன்மை நீங்கும்.

க்ளீட்டஸ் -- இனிப்பான சுவை பிடிக்கும் நேயர்கள், இதில் சர்க்கரையை அதிகரித்துக் கொள்ளலாம். மிகவும் சுவையானது இந்த சோயை பால்.

க்ளீட்டஸ் -- வாணி, சீன மக்கள் சோயா பாலை மிகவும் விரும்புகி்ன்றார்கள். அல்லவா?

வாணி -- ஆமாம், சோயா அவரையில் ஊட்டசத்து அதிகம். இதற்கு அதிக தாவர வெண்புரதம் உண்டு. சோயா பாலில் இரும்புச்சத்து பாலில் இருப்பதை விட 5 மடங்கு அதிகமாகும். இதிலுள்ள வெண்புரதம் பாலில் இருப்பதை விட குறைவு, ஆனால், இதன் 85 விழுக்காடு மனித உடம்பில் சேர்க்கப்படலாம்.

க்ளீட்டஸ் -- இவற்றை தவிர, சோயா பாலில் 8 வகை அமிலங்களும், வைட்டமின் எனும் உயரிச்சத்து பியும் உள்ளன.

வாணி -- சோயா பாலை அடிக்கடி குடித்தால், உடம்பின் கொழுப்புச்சத்து குறைக்கலாம். கொழுப்பைக் குறைக்கலாம்.

க்ளீட்டஸ் -- மேலும், இது உண்மையில் சுவையானது. நேயர்கள் நீங்களே வீட்டில் இதைதயாரித்து ருசிப்பார்க்க வேண்டும்.

வாணி -- இந்த குறிப்பை மறக்க கூடாது. பச்சை சோயா பாலைகுடிக்க கூடாது. குடிப்பதற்கு முன், நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.