நகரங்களில், சுரங்க இருப்புப்பாதை கட்டுமானம் மற்றும் இயங்கல் தரத்தை உயர்த்தி, பொது மக்களுக்கு தரமிக்க பொது போக்குவரத்து சேவையை வழங்கப் பாடுபட வேண்டும் என்று சீனத் துணை தலைமையமைச்சர் Zeng Pei Yan வலியுறுத்தினார். 2008 பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போக்குவரத்து திட்டப்பணிகளில் ஒன்றான, பெய்சிங் மாநகரின் தென் பகுதியையும், வட பகுதியையும் இணைக்கும் 5வது சுரங்க இருப்புப்பாதை நெறி இன்று சோதனை முறையில் போக்குவரத்துக்கு திறந்து விட்டது. இன்று Zeng Pei Yan வண்டியில் பயணித்த போது, உயர்வேக சுரங்க இருப்புப்பாதை கட்டுமான திட்டம் பற்றிக் கேட்டறிந்தார். நகர பொது போக்குவகத்தை முன்னுரிமையுடன் வளர்த்து, சிக்கனம், பயன் மற்றும் பாதுகாப்பு என்ற கோட்பாட்டின் படி, கட்டுமான அளவு மற்றும் வரையறையை உருவாக்கி, கட்டுமான மற்றும் இயங்கல் தரத்தை உயர்த்த வேண்டும் என்று அவர் கூறினார். தற்போது, பெய்சிங், Tian Jin, ஷாங்காய், Nan Ning உள்ளிட்ட 10 நகரங்களில், 22 சுரங்க இருப்புப்பாதை நெறிகள் போக்குவரத்துக்குத் திறந்து விட்டன. வண்டிகள் பயணித்த நீளம், 630 கிலோமீட்டரைத்தாண்டியுள்ளது.
|