• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-10 15:52:44    
வூ ஹான் நகரிலுள்ள புதிய ஆற்றங் கரை

cri

புதிய ஆற்றங் கரை

சீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள வூ ஹான் நகர், ஹு பெய் மாநிலத்தின் தலைநகராகும். யாங்ச்சி ஆறும், அதன் மிகப் பெரிய கிளையான ஹான் ஜியாங் ஆறும், நகரப் பகுதி முழுவதையும் குறுக்காக கடந்து செல்கின்றன. நடப்பு நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து, வூ ஹான் நகராட்சி ஹான் ஜியாங் ஆற்றின் கரை மீது பன்னோக்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. ஆற்றங் கரையின் வெள்ளத் தடுப்புத் திட்டப்பணியை, சுற்றுச்சூழலுக்கான பன்நோக்குக் கட்டுப்பாட்டுடன் இணைக்கும் இந்த நடவடிக்கை, வூ ஹான் நகரில் மனிதப் பண்பாட்டுக் காட்சியாக மாறியுள்ளது.

கட்டுப்படுத்தப்பட்ட ஹான் ஜியாங் ஆற்றங் கரையில் பச்சைப் பசேல் என புற்கள் நிறைந்து காணப்படுகின்றன. 7 கிலோமீட்டர் நீளமான இந்த ஆற்றங் கரை, யாங்ச்சி ஆற்றுக்கு அருகில் தீட்டப்பட்ட பச்சை நிற ஓவியம் போல் காட்சியளிக்கிறது. அங்கே பல்வகை பொழுது போக்கு வசதிகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. வெவ்வேறான சதுக்கங்கள் தனிச்சிறப்பு மிக்கவை. 82 வயதான மூதாட்டி LI YU ZHEN குழந்தை பருவத்திலிருந்தே யாங்ச்சி ஆற்றுக்கு அருகிலுள்ள தியன் ஜின் வீதியில் வாழ்ந்து வருகிறார். ஆற்றங் கரையின் மாற்றங்களை அவர் நேரில் கண்டு வருகிறார். முந்தைய ஆற்றங் கரையை மீளாய்வு செய்து அவர் கூறியதாவது—

புதிய ஆற்றங் கரை

"முன்பு இங்கே வந்த போது, எங்கெங்கும் குப்பைக் கூளங்கள் காணப்பட்டன. நடந்து செல்ல வசதியாக இல்லை" என்றார் அவர்.

கடந்த நூற்றாண்டின் 70ஆம் ஆண்டுகளிலிருந்து, வூ ஹான் நகரிலுள்ள ஆற்றங் கரையில், குப்பைக் கூளங்கள், கல் குவியல்கள், விதி மீறல் கட்டிடங்கள் ஆகியவை நிறைந்து காணப்பட்டன. பெருவாரியான கட்டிடங்கள் நீரைத் தடுத்ததால், யாங்ச்சி ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்தது. வெள்ளத் தடுப்பு நடவடிக்கை உரிய முறையில் மேற்கொள்ளத் தவறியதால், நீண்டகாலத்தில், வெள்ளத் தடுப்பில் வூ ஹான் நகரிலுள்ள ஆற்றங் கரை பங்காற்ற முடியவில்லை. கடந்த சில ஆண்டுகளில், நகரக் கட்டுமானத்தை விரைவுபடுத்த வூ ஹான் நகராட்சி அரும்பாடுபட்டு வருகிறது. 5 ஆண்டுகளுக்குள், இந்த ஆற்றங் கரையில் வெள்ளத் தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு நடவடிக்கை மேற்கொள்ள, 100 கோடி யுவானுக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்தது. வூ ஹான் நகராட்சி நீர் விவகார பணியகத்தின் துணைத் தலைவர் LIUG DONG CAI கூறியதாவது—

"புதிய ஆற்றங் கரையை முழுமூச்சுடன் கட்டியமைத்து, மக்கள் வாழ்க்கையுடன் தொடர்புடைய இத்திட்டப்பணியைச் செவ்வனே மேற்கொள்ளும் வகையில், வெள்ளத் தடுப்பு, திட்ட வடிவமைப்பு, தோட்டம், கட்டிடம், நிர்வாகம் முதலிய துறைகளையும், கலைக் கழகங்களையும் சேர்ந்த நிபுணர்கள் இடம்பெறும் சிறப்பு வடிவமைப்புக் குழுவை வூ ஹான் நகராட்சி உருவாக்கியுள்ளது. ஷாங்காய், ஹாங் சோ, சு சோ, ஹாங்காங், சிட்னி உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நகரங்களின் முன்னேறிய அனுபவங்களைப் பயன்படுத்தி, கட்டுமானத்தில் பச்சை நிறம் நிறைந்து காணப்படுவது, நீர் வளம் கொண்டிருப்பது, மக்களின் வாழ்க்கைக்கு வசதியாக அமைவது ஆகிய மூன்று தனிச்சிறப்புகளுக்கு அது முக்கியத்துவம் தருகிறது. கம்பீரமான, மர நிழல் மிகுந்த, விசாலமான மற்றும் சொகுசான புதிய ஆற்றங் கரையைக் கட்டிமைக்க வூ ஹான் நகராட்சி பாடுபடும்" என்றார் அவர்.

வெள்ளத் தடுப்பு வசதிகள் தொடர்பான துறையில், கட்டுப்பாட்டு நடவடிக்கை துவங்கிய பின், வூ ஹான் பயணியர் போக்குவரத்து துறைமுகத்திற்கும் யூ ஹான் துறைமுகத்திற்கும் இடையிலான 10 மதகுகளில் 5 மதகுகள் மூடப்பட்டுள்ளன. நீர் இறைப்புத் துறையில், தரை வடி கால் மூலம் மழை நீர் நேரடியாக ஆற்றில் ஓடுகிறது. இதன் மூலம், புதிய ஆற்றங் கரையின் வெள்ளத் தடுப்புத் திறன் பெருமளவில் உயர்த்தப்பட்டுள்ளது என்று LIU DONG CAI கூறினார்.

சீர்திருத்தத் திட்டப்பணியில், உயிரின வாழ்க்கைச் சூழல் பாதுகாப்புக்கு வூ ஹான் நகராட்சி முக்கியத்துவம் அளித்துள்ளது. இத்திட்டப்பணியின் முதல் காலகட்டத்தில் மட்டுமே, 58 தொழில் நிறுவனங்கள் இப்பகுதியிலிருந்து குடிபெயர்க்கப்பட்டன. 3 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவுடைய, நீர் ஓட்டத்தைத் தடுக்கும் பல்வகை கட்டிடங்கள் அகற்றப்பட்டன. புதிய ஆற்றங் கரையிலுள்ள குப்பைக் கூளங்களும் துப்பரவு செய்யப்பட்டுள்ளன. இயல்பாக வளரக் கூடிய மரம் செடி கொடிகளும் நடப்பட்டுள்ளன. முந்தைய குழப்பமான காட்சி முற்றிலும் மாறியுள்ளது.

தற்போது, வூ ஹான் நகரிலுள்ள புதிய ஆற்றங் கரையில் இருக்கும் போது, ஆண்டுக்கு ஒரு முறை ஏற்படும் வெள்ள காலத்தையும் தாண்டவமாடும் வெள்ளத்தையும் மக்கள் மறந்துள்ளனர். இக்கரையில், அமைதி, இணக்கம் மற்றும் மகிழ்ச்சியை வூ ஹான் நகரவாசிகள் ஆசை தீர அனுபவிக்கின்றனர்.