வாணி -- க்ளீடட்ஸ், வழக்கம் போல வகுப்பின் துவக்கத்தில் நேயர்களுடன் சேர்ந்து கடந்த வாரம் கற்றுக்கொண்டதை மீளாய்வு செய்கிறோம்.
க்ளீட்டஸ் -- சரி. கடந்த வகுப்பில் நாங்கள் 旅行,lv xing, அதாவது பயணம் பற்றி 3 வாக்கியங்களைக் கற்றுக்கொண்டோம்.
வாணி – ஆமாம். முதலாவது, 你们星期几去旅行? 你们,நீங்கள், 星期几,எந்த நாள், 旅行, பயணம் செய், 你们星期几去旅行?ni men xingqi ji qu lv xing ?
க்ளீட்டஸ் --你们星期几去旅行?ni men xingqi ji qu lv xing ? நீங்கள் எந்த நாள் பயணம் செய்வீர்கள்?
வாணி – அடுத்து, 星期四。xing qi si.
க்ளீட்டஸ் --星期四。xing qi si. வியாழக்கிழமை.
வாணி – 去多长时间?qu duo chang shi jian?
க்ளீட்டஸ் --去多长时间?qu duo chang shi jian? எத்தனை நாட்கள்? கடந்த வாரம் எந்த ஒலிகளைக் கற்றுக்கொண்டோம்?
க்ளீட்டஸ் – கடந்த வாரம் நாங்கள் P என்ற முதல் ஒலியைக் கற்றுக்கொண்டுள்ளோம். மேலும் இதனுடன் ஒரு புதிய சொல் hai pa, பயங்கரம் என்பதைப் படித்தோம். நான் வாசிப்பது சரியா?
வாணி – பரவாயில்லை. என்னுடன் b,p ஆகிய 2 ஒலிகளை வாசிக்கவும். b
க்ளீட்டஸ் – b
வாணி – ba, baba, 爸爸。
க்ளீட்டஸ் –ba, baba, 爸爸。
வாணி – p
க்ளீட்டஸ் – p
வாணி -- hai pa
க்ளீட்டஸ் -- hai pa
வாணி – இப்போது புதிய வகுப்பைத் துவக்கலாம். பயணம் பற்றிய உரையாடலைத் தொடர்ந்து கற்றுக்கொள்வோம். முதலில், ni men qu duo chang shi jian . 你们去多长时间? 时间 நேரம். 去,போவது, ni men qu duo chang shi jian . 你们去多长时间?
க்ளீட்டஸ் -- ni men qu duo chang shi jian . 你们去多长时间? நீங்கள் எத்தனை நாட்கள் வெளியில் தங்குகிறீர்கள்
வாணி – மீண்டும் ஒரு முறை ni men qu duo chang shi jian . 你们去多长时间?
க்ளீட்டஸ் -- ni men qu duo chang shi jian . 你们去多长时间? நீங்கள் எத்தனை நாட்கள் வெளியில் தங்குகிறீர்கள்?
வாணி – 半个月左右。Ban ge yue zuo you. Ban அரை, ge விகுதி, yue , மாதம். Zuo you சுமார். 半个月左右。Ban ge yue zuo you.
க்ளீட்டஸ் --半个月左右。Ban ge yue zuo you. சுமார் அரை மாதம்.
வாணி – மீண்டும் ஒரு முறை. 半个月左右。Ban ge yue zuo you.
க்ளீட்டஸ் --半个月左右。Ban ge yue zuo you. சுமார் அரை மாதம்.
1 2
|