• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-08 21:34:16    
ஒலிம்பிக் தன்னார்வத் தொண்டர்கள்

cri

தற்போது, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி மற்றும் பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் போட்டியின் தன்னார்வ தொண்டர்களை உறுதி செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. அதிர்ஷிடம் பெய்சிங் என்ற தொடர்ப் போட்டிகளில் கலந்துகொண்ட 870 பேர், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி மற்றும் பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் போட்டியின் தன்னார்வ தொண்டர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், இவர்கள் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு அமைப்புக் குழு உறுதி செய்த முதலாவது தொகுதி தன்னார்வத் தொண்டர்களும் ஆவர். செப்டம்பர் 28ம் நாள் பிற்பகல் நடைபெற்ற பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி மற்றும் பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் போட்டியின் தன்னார்வ தொண்டர்கள் பற்றிய கூட்டத்திலிருந்து எமது செய்தியாளர் இத்தகவலைத் தெரிவித்தார்.

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி மற்றும் பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் போட்டியின் தன்னார்வ தொண்டர்களை தேர்வு செய்து உறுதி செய்யும் திட்டத்தின் படி, 2008ம் ஆண்டு மே திங்கள், இப்போட்டிகளின் தன்னார்வ தொண்டர்களை அமர்த்தும் பணி நிறைவடையும். அப்போது, தன்னார்வ தொண்டர்களின் பொது பயிற்சி, சிறப்புத்துறை பயிற்சி, பணித்தலப் பயிற்சி, ஆகியவை தொடர்ந்து முன்னேற்றப்படும்.