• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-08 21:35:58    
உலக அஞ்சல் செய்யும் உலக வணிக நிறுவனங்களுக்கான மாநாடு

cri

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை அஞ்சல் செய்யும் உலக வணிக நிறுவனங்களுக்கான மாநாடு, செப்டம்பர் 27ம் நாள் முற்பகல், பெய்ஜிங்கில் துவங்கியது. ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பற்றிய செய்திகளைத் திரட்டுவதில் அன்னிய செய்தி ஊடகங்களுக்கு சீனாவில் பல்வேறு நிலை அரசு வாரியங்கள் உதவி அளிக்கும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பெய்ஜிங் மாநகர கமிட்டிச் செயலாளரும், பெய்ஜிங்கின் தலைவரும், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டி அமைப்பு குழுவின் தலைவருமான லியுஜி சுட்டிக்காட்டினார்.

பெய்ஜிங் ஒலிம்பிக் செய்தி மையம், 30க்கு மேலான செய்தி ஊடகங்களுக்கு உதவி அளித்துள்ளது. "அதிர்ஷிடம் பெய்ஜிங்" என்ற தொடர்ப் போட்டி காலத்தில், பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்பு குழு 136 செய்தி ஊடகங்களின், 3644 பேருக்கு சேவையை அளித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

இம்மாநாடு, செப்டம்பர் 28ம் நாள் முடிவடைந்தது. 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு முன்பு நடைபெற்ற கடைசியான அஞ்சல் செய்தல் நிறுவனங்களுக்கான மாநாடு, இதுவேயாகும். அமெரிக்க தேசிய ஒலிபரப்பு நிறுவனம், ஐரோப்பிய ஒலிபரப்பு ஒன்றியம், சீன மத்திய தொலேகாட்சி நிலையம் முதலிய நிறுவனங்களைச் சேர்ந்த 120 பிரதிநிதிகள், இம்மாநாட்டின் போது, கலந்து கொண்டனர். இம்மாநாடு காலத்தில், அவர்கள், ஒலிம்பிக் மைய பிரதேசம், சர்வதேச ஒலிபரப்பு மையம், செய்தி ஊடக கிராமம் ஆகிய ஒலிம்பிக் விளையாட்டு அரங்குகளை பார்வையிட்டனர்.