செப்டம்பர் திங்கள் 22 ஆம் நாள் இடம்பெற்ற நிகழ்ச்சிகளைக் கேட்டேன். தற்போது ஐ.நா.வின் தலைமையகத்தில் துவங்கியிருக்கும் பொதுப்பேரவைக் கூட்டம் பற்றிய சில தகவல்களை விரிவான முறையில் வழங்கினீர்கள். மிக்க நன்றி. வழக்கம்போல தோல்வி அடைவோம் என தெரிந்திருந்தும், ஐ.நா.வில் தகுநிலையைப் பெற தைவான் மேற்கொள்ளும் முயற்சி கேலிக்குரியதாக உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் தைவான் மேற்கொள்ளும் முயற்சியின் முடிவு, அதன் முகத்தில் கரியை பூசிய போதிலும், குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக, கண்பார்வையற்றவன் இலக்கை தேடும் முயற்சியில் தைவான் தொடர்ந்து ஈடுபட்டு வருவது
நகைப்பிற்குரியது. தைவான் பிரதேசம், ஐ.நா.வில் சேர பிரம்மபிரயத்தன முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும், கிட்டத்தட்ட 126 நாடுகள், தைவானின் கருத்துருவை எதிர்க்கும் செய்தி மனநிறைவை அளிப்பதாக உள்ளது. பாராட்டுக்கள். ......... பெருந்துறை பல்லவி கே பரமசிவன் 20.09.07 அன்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 17வது தேசிய மாநாடு மீதான சீன மக்களின் எதிர்பார்ப்பு என்ற செய்தித் தொகுப்பு கேட்டேன். CHEN FAN அம்மையார் கூறியது போல், வீட்டு வேலை உயர்வு, கல்வி கட்டணம் அதிகம், கூடுதலான மருத்துவ சிகிச்சைக் கட்டணம் ஆகியவைற்றை குறைத்தால் தான் சாதாரண மக்களும் நிம்மதியாக வாழ முடியும் இதற்கு தற்போதைய அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதனை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். ......... ஊத்தங்கரை கவி.செங்குட்டுவன் இன்று 22.09.2007 - ல் இடம் பெற்ற செய்திகள் மூலம் 62வது ஐ.நா. பேரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தைவான் தொடர்பான தீர்மானம் பற்றி அறிந்தேன். இதில் 140 நாடுகள் கலந்துக் கொண்ட பொது பேரவைக் கூட்டத்தில், 126 நாடுகள் ஒரே சீனா என்ற கோட்பாட்டை ஆதரித்து உள்ளமை சீனாவின் தற்போதைய நிலையை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.
மேலும், சீன - பிரிட்டன் இரண்டாவது நெடு நோக்கு பேச்சு வார்த்தை பற்றி அறிந்தேன். பெய்ஜிங்கில் நடைபெற்ற இப்பேச்சு வார்த்தையில் இரு நாட்டு உறவு வளர்ச்சி மற்றும் எதிர்காலத் திட்டங்கள் பற்றியும், இரு நாட்டு பன்முகக் கூட்டாளி உறவு மேம்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டதை அறிந்து மகிழ்ந்தேன் ..........திருப்பூர் இரா.சின்னப்பன் மக்கள் சீனம் நிகழ்ச்சியில் சீனாவில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் பெரிய எண்ணய்க்கிணறு பற்றி அறிந்தேன். நட்புப்பாலம் நிகழ்ச்சியில் பாலகுமார் அவர்களின் பேட்டி நிகழ்ச்சி உண்மையில் மறக்கமுடியாத ஆனால் மிகவும் வருந்தக்கூடிய நிகழ்ச்சியாய் அமைந்து விட்டது. சீன உணவரங்கம் நிகழ்ச்சியில் மீண்டும் ஒருமுறை கத்தரிக்காய் வருவல் பற்றி அறியமுடிந்தது. ......... பேளுக்குறிச்சி கெ செந்தில் 17.09.2007 அன்று செய்தித் தொகுப்பில் தாய்லாந்தில் நிகழ்ந்த விமான விபத்து பற்றிய விரிவான தகவல்களை கேட்டேன். இந்த விபத்தில் உயிழந்தவர்களின் குடும்பத்தாவர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை சீன வானொலி தமிழ்ப் பிரிவு மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். அண்மை காலங்களில் அதிக விமான விபத்துக்கள் ஏற்படுவதன் மூலம் அதிக அளவு உயிர் சேதங்கள் ஏற்படுவது வேதனைக்குரியது. இனி வரும் காலங்களில் இது போன்ற விபத்துகள் ஏற்படாமல் பார்க்க வேண்டும். ஆனால் இது சாத்தியமா?
........ மதுரை-20 என் இராமசாமி 2007ம் ஆண்டு ஆசிய வளர்ச்சி வங்கி தனது ஆய்வு அறிக்கையில் சீன மற்றும் இந்திய பொருளதார வளர்ச்சியின் வேகம் கடந்த 10ஆண்டுகளாக ஏற்படாத மிக உயர்வான நிலையை எட்டி உள்ளது என சுட்டிக் காட்டியுள்ளது. ........... திருப்பூர்.சின்னப்பன்.இரா மலர்ச்சோலை நிகழ்ச்சியில் சீனாவில் கட்டப்பட்டு வரும் வானளவு உயர்ந்த கட்டிடம் பற்றி அறிந்தேன். அதில் வானளாவிய அழகான தமிழ் சொல்லை பயன்படுத்தியமை பாராட்டுக்குறியது.
|