• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-09 17:41:10    
சூரிய ஆற்றல்

cri
நிலக்கரி, எண்ணெய், இயற்கை வாயு முதலிய பாரம்பரிய எரியாற்றலைக் கூடுதலாகச் சார்ந்திருக்கும் நிலைமையை மாற்ற, காற்று ஆற்றல், சூரிய ஆற்றல், நிலத்தடி வெப்பம் முதலிய புதிய எரியாற்றல்களின் தொழில் நுட்பத்தை வளர்ப்பதில் சீனாவில் பல்வேறு இடங்கள் ஈடுபட்டு வருகின்றன. வடக்கு சீனாவில் அமைந்துள்ள ஹெர் பெய் மாநிலத்தின் Bao ding நகரம், சூரிய ஆற்றல் நகரத்தை நிர்மானிக்கப் பாடுபட்டு வருகின்றது.

பெரும்பாலான நகரங்களில், போக்குவரத்து விளக்குகளில் மாறுதிசை மின்னோட்டம் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால், Bao ding நகரில் போக்குவரத்து விளக்கு கம்பங்களின் மேல் பகுதியில் ஒரு சிறப்பான வசதி பொருத்தப்படுவதாக எமது செய்தியாளர் கண்டுபிடித்தார். இது, சூரிய ஆற்றல் மின்கலமாகும். இது சூரிய ஆற்றலை மின்னாற்றலாக மாற்றி, விளக்குகளின் பயன்பாட்டுக்கு உத்தரவாதம் அளிக்கும்.
இந்தப் புதிய ரக எரியாற்றலின் அளவு எப்போதும் பற்றாக்குறையாக இல்லாதது. மட்டுமல்ல, சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது. சூரிய ஆற்றலுடன் கூடிய போக்குவரத்து விளக்குகள் bao ding நகரில் பயன்பாட்டுக்கு வந்தவுடன் உள்ளூர் நகரவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இது மின்னாற்றலைச் சிக்கனப்படுத்தும். நல்ல வசதி என்று கருதுகின்றேன்.
எனது குடியிருப்புப் பிரதேசத்தில் முழுவதிலும் சூரிய ஆற்றல் போக்குவரத்து விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. எரியாற்றலைச் சிக்கனப்படுத்துவதுடன் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கலாம். நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் என்றனர் நகரவாசிகள்.
நகரத்தில் சுமார் 20 விழுக்காடு அதாவது 22 சாலை சந்திப்புகளில் இந்தப் புதிய விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன என்று நகர போக்குவரத்து நிர்வாக வாரியத்தின் பொறுப்பாளர் liu tao தெரிவித்தார். அவர் கூறியதாவது


சூரிய ஆற்றல் போக்குவரத்து விளக்குகளின் நன்மைகளில் 2 வகைகள் காணப்படுகின்றன. ஒன்று, மின்னாற்றல் விநியோக வடிவத்தை மாற்றியுள்ளது. அதாவது சிக்கன ரக எரியாற்றலைப் பயன்படுத்துகின்றது. 2வதாக, கம்பி இல்லா இணைப்பு பயன்படுத்தப்படுகின்றது. போக்குவரத்து விளக்கு வசதிகளை பொருத்தும் போது, முன் கூட்டியே கம்பிகளை புதைக்க தேவையில்லை என்றார் அவர்.
சில முக்கிய சாலை சந்திப்புகளில் சூரிய ஆற்றல் போக்குவரத்து விளக்குகளைப் பொருத்துவதைத் தவிர, bao ding நகரத்தின் பல சாலைகளின் 2 பக்கங்களிலும் சூரிய ஆற்றல் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த ஓராண்டு காலத்தில், சுமார் 200 சூரிய ஆற்றல் சாலை விளக்குகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. BAO DING நகரத்தின் சாலை விளக்குகள் பற்றிய நிர்வாக பிரிவின் தலைமைப் பொறியியலாளர் ZHAO WAN ZENG எடுத்து கூறியதாவது


தற்போது, சாலைகளில் 250 வாட் அளவுடைய sodium விளக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. நாள்தோறும் ஒவ்வொரு விளக்கும் 10 மணி நேர ஒளி எதிந்தால், நாளுக்கு இது சுமார் 3 கிலோவாட் மின்னாற்றலைப் பயன்படுத்துகின்றது. கடந்த ஆண்டு மின்னாற்றல் கட்டணம் ஒரு கோடியே 50 இலட்சம் யுவானைத் தாண்டியது. எரியாற்றல் சிக்கன வசதிகளின் பரவலுடனும், சூரிய ஆற்றல் சாலை விளக்குகளின் பயன்பாட்டுடனும், மின்னாற்றல் கட்டணம் பெரிதும் குறையும் என்றார் அவர்