• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-09 17:49:30    
சீனாவின் கடல் வழி பட்டுப்பாதை

cri

சீனப் பீங்கானும் மேற்குலகில் பெருமளவில் வரவேற்கப்பட்டது.
சீனத்துப்பட்டையும், சீனாவின் பண்பாட்டையும் கொண்டு செல்ல உதவியதோடு, வெளிநாட்டு பண்பாட்டையும், பொருட்களையும் சீனாவில் நுழைய உதவியது இந்த பட்டுப்பாதை. சீனாவின் வட மேற்கு எல்லைப்பபுறத்தில் உள்ள சீனர்கள் அல்லாத பழங்குடியினரை குறிப்பிடும் Hu என்ற சொல், பண்டைய சீனப் பதிவேடுகளில் காணப்படுகின்றன. ஆனால் இவை தாவரங்களை குறிப்பிடும் போது பயன்படுத்தப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக hugua (வெள்ளரி) Hulubo (கேரட்) hujiao(கறுப்பு மிளகு) Hucong(வெங்காயம்). இவையெல்லாம் மேற்கிலிருந்து சீனாவுக்கு வந்தவை. இன்றைக்கு இவை சீனாவில் பரவலாக காணப்படுகின்றன.

ஆனால் ஒரு காலத்தில் இவை சீனாவில் இருந்ததில்லை. சீனாவுக்கு வெளியே இருந்து கொண்டு வரப்பட்டு, பின் சீனாவில் ஊன்றியவை. தாவரங்கள் மட்டும் வெளியே இருந்து சீனாவுக்குள் கொண்டு வரபடவில்லை. Han வம்சக்காலத்தில் ரோமாபுரியின் கண்ணாடி பொருட்கள், நடனம், இசை, கழைக் கூத்து நடனம் போன்ற மேற்கரிய கலைகளும் சீனாவுக்குள் பட்டுப்பாதையின் வழியாக நுழைந்தன.
கி.பி. 221ஆம் ஆண்டிலிருந்து 907 ஆண்டு வரையான Wei-Jin மற்றும் Sui-Tang ஆட்சிக்காலத்தின் போது, Anxi எனப்படும் இன்றைய ஈரானிலிருந்து பல வணிகர்கள் சீனாவில் குடிபுகுந்தனர். அவர்களோடு மைய மற்றும் மேற்கு ஆசியாவின் நடனம், உணவு மற்றும் ஆடைகளும் சீனாவுக்குள் நுழைந்தன.


கிழக்குக்கும் மேற்குக்குமிடையிலான வர்த்தகத்தின் மேம்பாட்டுடன், இவ்விரு பெரும் நாகரீகங்களின் ஒன்று மற்றதன் மீதான செல்வாக்கும், தாக்கமும் அதிகரித்தன. பல பயன்பாட்டுச் சிறப்புகள், சாதனைகளின் பரிமாற்ற ஊடுவழியாகவும் திகழ்ந்தது பட்டுப்பாதை.
உலகின் மிகப்பெரும் சமயங்களில் ஒன்றான பெளத்தம், பட்டுப்பாதை வழியாகத்தான் இந்தியாவிலிருந்து சீனாவுக்கு அறிமுகமானது. அறிமுகமான கிட்டத்தட்ட 580 ஆண்டுகளுக்குள் சீன மக்களின் மனதிலும் சிந்தனையிலும் உறுதியாக ஊன்றியது. பொளத்தம். பொளத்த சமய சித்தாந்தங்கள் பல உருவெடுத்தன. இன்றைக்கு சீனாவின் பல்வேறு பகுதிகளில் பொளத்த கோயில்களும், மடங்களும் காணப்படுகின்றன.
பெளத்த சமயத்தின் வரவு சீன மக்களின் சீன நாட்டின் பண்பாட்டில் ஆன் மீக வாழ்க்கையில், ஆழமான பாரதூரமான செல்வாக்கை, பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.


ஆக தரைவழியிலும் சரி, கடல்வழியிலும் சரி, பட்டுப்பாதை, கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையிலான வர்த்தக இணைப்பாக மட்டுமன்றி அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகியவற்றின் பரிமாற்ற பாதையாகவும் விளங்கியது நமக்கு நன்றாகவே புரிகிறது.