• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-11 13:36:37    
கோடை மாளிகை

cri
கோடை மாளிகை என்பது சீன மொழியில் யி ஹெ யுவன் என்று அழைக்கப்படுகின்றது. அதன் அர்த்தம், அமைதியான ஐக்கிய பூங்கா என்பது அதன் பொருளாகும். இதுவே சீனாவின் கடைசி சிங் வம்சத்தின் அரண்மனையாகவும் விளங்கியது. தோட்டங்களும் விதானங்களும் நிறைந்த இவ்வழகுச் சோலை, இன்ப நாட்டமுடைய பிரபுத்துவ ஆட்சியாளர்களை நீண்டகாலமாக கவர்ந்து வந்துள்ளது.
இந்த அரண்மனைப் பூங்கா, 290 ஹெக்டர் பரப்புடையது. அதன் நான்கில் முன்று பங்கு இடத்தில் குன் மிங் ஏரி அமைந்துள்ளது. அங்குள்ள மாளிகைகள், கோபுரங்கள், விதானங்கள், தாழ்வாரங்கள், நடைபாதைகள், பாலங்கள், அழகிய மலைச்சாரல்கள், ஏரிக்கரைகள், தீவுகள் முதலியவற்றைப் பார்வையிட, ஒரு நாள் கூடப் போதாது என்றே கூறலாம். ஒவ்வொன்றும் தனித்தனி இயல்புடன் அமைந்தாலும் நிலக்காட்சித் தோற்றத்துக்கு மிகப் பொருத்தமாக அமைந்துள்ளன.
கோடை மாளிகையில் வசித்த காலத்தில் பேரரசி டவாகர், கருணை-நீண்ட ஆயுள் மண்டபத்திலே தனது அரசவையைக் கூட்டினார். அதன் வாயிலில் "நீண்ட ஆயுளுக்கு இசைவானது கருணை" என்ற நான்கு சீன எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
இம்மாளிகைக்கு அருகே, இன்ப நீண்ட ஆயுள் மாளிகை அமைந்துள்ளது. அங்கேயே சி ஸி வாழ்ந்து வந்தார். பவளம், தந்தம், முத்து ஆகியவற்றால் செய்யப்பட்ட பொருட்கள் அம்மண்டபத்தை அலங்கரிக்கின்றன.
இந்தத் தாழ்வாரத்தின் மேற்கு முனைத் திருப்பம் ஒன்றில், சலவைக்கலாலான படகு ஒன்று இருக்கின்றது. சீன கடற்படைக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து இப்பூங்கா அமைக்கப்பட்டதால் 36 மீட்டர் நீளமான இப்படகு, அதன் சின்னமாகக் கருதப் படுகின்றது.
அடுத்து, நிறம் தீட்டிய தீராந்திகள், வளைவுகள் உடைய கம்பீரமான மர வில்வாயில் காணப்படுகின்றது. அதிலிருந்து நீண்ட கல்படிகளில் ஏறிச்சென்றால், மலைச்சாரலிலுள்ள முகில் கலைத்தல் மாளிகையை அடையலாம்.
முகில் கலைத்தல் மாளிகையிலிருந்து இரு புறங்களிலுமுள்ள தாழ்வாரம், கல்படிகள் ஆகியவற்றின் வழியே நடந்தால், புத்தரின் நறு மண விதானத்தை அடையலாம்.
இன்னும் அது பற்றி அறிய வேண்டுமானால், நீங்கள் நேரில் சென்று பார்க்க வேண்டுமேயன்றி, அதன் கச்சிதமான கவர்ச்சி வனப்பை வார்த்தைகளால் வர்ணிக்கவே இயலாது.
நுழைவு கட்டனம்: சுற்றுலாக் காலம் : 40 யுவான், இதர காலம் : 20 யுவான் (மாணவர்களுக்கு:அரை கட்டனம்)
பூங்கா திறக்கப்படும் நேரம் : சுற்றுலாக் காலம்: காலை 6:30 மணி முதல் மாலை 6 மணி வரை
இதர காலம் : காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை