• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-11 13:37:36    
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னமும் கொடியும்

cri

கட்சிக் கொடி

தமிழன்பன்.....இன்னொரு தகவலில் எனக்கு ஒரு ஆர்வம் உண்டு.

கலை........சொல்லுங்கள்.

தமிழன்பன்........சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடி மற்றும் சின்னம் உண்டா?அதன் நிறம் என்ன?

கலை........சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடியும் சின்னமும் உண்டு. கொடி செந்நிறத்தில் உள்ளது. அதில் மஞ்சள் நிறம் கண்ட அரிவாளும் சுத்தியலும் காணப்படுகியன்றன.

தமிழன்பன்........சீன மக்களை பொறுத்தவரை செந்நிறம் புரட்சியின் சின்னமாக கருதப்படுகின்றது. சரிதானா?

கலை......சரிதான். மஞ்சள் நிறத்திலுள்ள அரிவாளும் சுத்தியலும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் உழைப்புக் கருவிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

தமிழன்பன்........சீனத் தொழிலாளர் வர்க்கத்தின் முன்னேறிய அணியாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அழைக்கப்படுகின்றது.

கலை........ஆமாம் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளர் வர்க்கத்தையும் மிகப் பல மக்களின் அடிப்படை நலனையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.

கட்சிக் சன்னம்

தமிழன்பன்.......ஆகவே சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்வேறு நிலை வாரியங்களும் அனைத்து கட்சி உறுப்பினரும் கட்சியின் சின்னத்திற்கும் கட்சிக் கொடியின் மாண்புக்கும் மதிப்பளிக்க வேண்டும்.

கலை........ஆமாம். விதிகளுக்கு இணங்க செயல்பட்டு கட்சிச் சின்னத்தையும் கட்சிக் கொடியையும் உகந்த முறையில் பயன்படுத்த வேண்டும்.