• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-11 16:30:47    
பெய்ஜிங்கின் வான்சாவ் கோயில்

cri

பெய்ஜிங் மாநகரத்தின் மேற்குபகுதியில், 430 ஆண்டுக்கால வரலாறுடைய கோயில் ஒன்று உள்ளது. அதன் பெயர், வான்சாவ் கோயில். இக்கோயில், சீனாவின் மிங் மற்றும் ச்சிங் வம்சக்காலங்களில், அரசக் குடும்பங்களின் கொண்டாட்ட விழாக்கள் நடைபெறும் இடமாகவும், தற்காலிக அரச மாளிகையாகவும், இருந்தது. சிறிய அரண்மனை அருங்காட்சியகமாகவும், இது அழைக்கப்பட்டது. இதில், ஓவியங்கள், பூத்தையல், பீங்கான உள்ளிட்ட சுமார் 70 லட்சம் கலைப்பொருட்கள் இருப்பதால், பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஈர்க்கப்படுகின்றனர்.
திரு KONG XIANG LI, வான்சாவ் கோயிலை சுமார் 20 ஆண்டுகள் ஆய்வு செய்துள்ளார். இக்கோயில் பற்றி அவர் கூறியதாவது:


இக்கோயில், கி.பி.1577ம் ஆண்டில் கட்டியமைக்கப்பட்டது. இது, அரசக்குடும்பங்களுடன் நெருங்கிய தொடர்புடையது. மிங் வம்சக்காலத்தின் வான் லீ பேரரசரின் தாய், புத்த மதம் மீது மிகவும் நம்பிக்கை கொண்டார். புத்தத் திருமறை நூல்களை வைப்பதற்காக, அவர் வான்சாவ் கோயிலை, தனது சொந்த செலவில் கட்டினார் என்றார் அவர்.
பின்னர், சில தலைமுறை பேரரசர்கள் காலங்களில், பலப்பகுதிகள் திருத்தியமைக்கப்பட்டதன் மூலம், இறுதியில், கோயில், தற்காலிக அரச மாளிகை, பூங்கா ஆகியவற்றைக் கொண்ட, மிக பெரிய அளவிலான அரசக்குடும்பக் கோயிலாக, இக்கோயில் மாறியுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு நெறிகள் மூலம், இக்கோயிலில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம். கோயிலின் கிழக்குப்பகுதி, மதத் துறவிகள் வாழும் பகுதியாக உள்ளது. இங்குள்ள தோட்டம் அமைதியானது. மேற்குபகுதி, பேரரசர்களின் தற்காலிக ஓய்வு மாளிகையாகும். சிறப்பான அரன்மணை பாணி கட்டிட்டங்கள்,

அழகான மாளிகைகள், பரந்தளவிலான தோட்டம் ஆகியவை, அரசக்குடும்பத்தினரின் கம்பீரத்தை எடுத்துக்காட்டுகின்றன. இக்கோயிலின் வழிகாட்டி SUN QIU XIA அம்மையார், அறிமுகப்படுத்துகையில், அரசக்குடும்பங்களுக்கான சிறப்புக் கோயிலான, வான்சாவ் கோயில், பொதுவாக, அரசக்குடும்பத்தினரை மட்டும் வரவேற்று, பிறந்த நாளுக்கான கொண்டாட்ட விழாவுக்கு பயன்படுத்தப்பட்டது. ஒவ்வொர் ஆண்டிலும், அது, பத்து நாட்கள் மட்டும் பொது மக்களுக்குத் திறக்கப்பட்டது என்று கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
வான்சாவ் கோயில், மிங் மற்றும் ச்சிங் வம்ச காலங்களில் அரசக்குடும்பங்களுக்கான முக்கியமான கோயிலாகும். இதனால், உயர்நிலை அதிகாரிகள், இக்கோயிலில் வழிபாடு செய்யலாம். சாக்கியமுனியின் பிறந்த நாளுக்கு முன்னும் பின்னுமாக, ஒரு சில நாட்களில் மட்டும், பொது மக்கள் இக்கோயிலில் நுழைந்து வழிப்பாடு செய்ய அனுமதிக்கப்பட்டனர் என்றார் அவர்.

 
இக்கோயிலின் முற்பாதியில் அமைந்துள்ள பெரிய மாளிகை, இக்கோயிலின் மிக முக்கிய கட்டிட்டமாகும். மாளிகைக்கு முன்பு, இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில், ச்சிங் வம்சத்தின் ச்சியா லூங் பேரரசர், தமது தாயின் 100வது பிறந்த நாளைக் கொண்டாட, எழுதிய கவிதை செதுக்கப்பட்டுள்ளது. மாளிகையில், மிங் வம்சக் காலத்தின் வெண்கல புத்த சிலை இருக்கிறது. இப்புத்த சிலை, ஆயிரம் இலைகளுடைய தாமராப்பூவில் அமைந்துள்ளார். ஒவ்வொரு தாமலை இலையிலும் ஒரு சாக்கியமுனியின் சிலை, இருக்கிறது. இந்தப் பெரிய மாளிகையிலிருந்து, கோயிலின் பிற்பகுதிக்குச் சென்றால், கோயில் கட்டியமைக்கப்பட்ட போது இருந்த மூன்று பெரிய செயற்கை மலைகளைக் காணலாம். மலைகளில் மாடமாளிகைகள் உண்டு. இவை, கற்பாலங்கள் மூலம் இணைக்கப்படுகின்றன. அதன் சுற்றுப்புறங்களில், அதிக மரங்கள் உள்ளன. சீன தைவான் மாநிலத்தின் பயணி CHEN HUI LIN அம்மையார், முதல் முறையாக இக்கோயிலுக்குப் பயணம் மேற்கொண்டார். அவர் கூறியதாவது:

 
வெளியே உயர் நவீன கட்டிட்டங்கள் நிறைந்திருந்தாலும், இங்கு மிகவும் அமைதியாக இருக்கிறது. இக்கோயில், சிறிய அரன்மணை அருங்காட்சியகமாக அழைக்கப்படுகிறது என்பதைக் கேள்விப்பட்டேன். இங்கு வந்தால், கடந்த கால வரலாற்று உணர்வுகளை உணர்ந்துகொள்ளலாம் என்றார் அவர்.