
கொரிய இன மக்கள், வடக்கிழக்கு சீனாவின் liao ning, ji lin, hei long jiang ஆகிய மூன்று மாநிலங்களில் வாழ்கின்றனர். சிலர் உள்மங்கோலியாவிலும் பிற நகரங்களிலும் வாழ்கின்றனர். கொரிய இனத்தின் மக்கள் தொகை, 19 லட்சத்து 20 ஆயிரமாகும். சீனாவிலான கொரிய இனத்தவர்கள், 17ம் நுற்றாண்டில் கொரிய தீபகற்பத்திலிருந்து குடியேறிவர்களாவர்.
கொரிய இனம், சொந்த மொழியைக் கொண்டது. கொரிய மொழி,Altaic மொழி குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.

1952ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 3ம் நாள் ji lin yanbian கொரிய இன தன்னாட்சி சோ நிறுவப்பட்டது. 1958ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 15ஆம் நாள் jilin changbai கொரிய இன தன்னாட்சி மாவட்டம் நிறுவப்பட்டது.
கொரிய இன மக்கள் கூடி வாழ்கின்ற பிரதேசங்களில், குறிப்பாக, yanbianயில் வேளாண்மை, வனத்தொழில், கால்நடை வளர்ப்பு, உப தொழில் மீன்பிடிப்பு முதலிய துறைகள் பன்முகங்களிலும் வளர்ந்து வருகின்றன. Yanbian பிரதேசம், வட சீனாவின் நெல் விளையும் பிரதேசமாகவும் முக்கிய புகையிலை விளையும் பிரதேசங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. யென் பியென் மாடு, சீனாவின் 5 தலைசிறந்த மாடு வகைகளில் ஒன்றாகும். Ginsengஉம், மான் கொம்பும் உலகில் புகழ் பெற்றன.
கொரிய இன மக்கள், வெண்ணிற ஆடைகளை அணிய விரும்புவதால் வெள்ளை ஆடை இனமாகக் கூறப்பட்டனர்.
கொரிய இனத்தின் விழாக்களும் ஹான் இனத்தின் விழாக்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருக்கின்றன.

கொரிய இனத்தின் விளையாட்டு நடவடிக்கைகள், சிறப்பானவை. ஆண்கள் மற்போரையும் கால்பந்தாட்டத்தையும் பெண்கள் சீசா எனப்படும் பலகை விளையாட்டையும் ஊஞ்சலையும் விரும்புகின்றனர்.
கொரிய இன மக்கள் சோறு சாப்பிடுவதை நேசிக்கின்றனர். சோறு சமைப்பதில் வல்லவர்கள். மிளகாய், அவர்களின் மிக முக்கிய உணவாகும்.

சாப்பிடும் போது உணவு பாத்திரங்களைப் போடுவதும் குறிப்பிட்ட விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். குடும்பத்தினர் சாப்பிடும் போது, முதியவர்களுடன் மது அருந்த கூடாது. புகை பிடிக்கக் கூடாது. இதன் மூலம் முதியோருக்கு மதிப்பு வழங்கப்படுகிறது.
|