அந்த கிராமத்தின் தலைவரது பெயர், னெல்தென்கெரிரே, தலைவராக பதவி ஏற்ற போதிலும், அவருக்கு வயது, டோயா போல 30க்கு மேல் தான் அவரது வீட்டில் நுழைந்ததும் அவருடைய மேசையில் பல பல மங்கோலிய உணவுகளை கண்டோம். பால் தோபஃ,பாலடைக்கட்டி, பால் தேநீர் ஆகிய சுவையான உணவுகள் இருக்கின்றன. இவை, குடும்பப் பெண்மணிகளின் அற்புதமான தயாரிப்பாகும். புல்வெளியை வந்தடைந்தால் இவற்றை நிச்சயம் சாப்பிட வேண்டும் என்று அவர் கூறினார்.
அவருடைய குடும்பத்தில் மொத்தம் 5 பேர் உள்ளனர். குடும்பத்தின் உறுப்பினர்களது எண்ணிக்கைக் கேற்ப அவர்களுக்கு 10 ஆயிரத்து 300 மொ நிலபரப்புடைய புல்வெளி கிடைத்தது. அவர் கூறியதாவது. என்னுடைய பணிக்குழுவில், அனைவருக்கும் சராசரியாக 2 ஆயிரத்து 20 லட்சம் மொ நிலபரப்புடைய புல்வெளி இருக்கிறது. 1983, 84ம் ஆண்டுகளில் அனைத்து குடும்பங்கலுக்கும் கால்நடைகள் வழங்கப்பட்டன. 1991ம் ஆண்டு முதல் புல்வெளி நிலம் வழங்கப்பட்டது என்றார் அவர். இதன் விளைவாக, அங்கே வாழ்கின்ற ஆயர்களின் வாழ்க்கையில் மாபெரும் மாற்றம் காணப்பட்டது. னெர்தெகெரிரே விளக்கி கூறியதாவது
மாற்றம் தெளிவானது. துவக்கத்தில், அனைத்து வருமானமும், குழுவைச் சேரும் அனைவரும் குழுவிலிருந்து ஊதியம் பெறுவார்கள் தற்போது அப்படி இல்லை. அவரவர் சொந்த முயற்சிக்கிணங்க, வருமானம் கிடைக்கலாம் என்றார் அவர், அவருடைய குடும்பத்தில், 400க்கு அதிகமான ஆடுகளும், 200க்கு அதிகமான மாடுகளும் இருக்கின்றன. ஆண்டுதோறும், குடும்பத்தின் வருமானம், 1 லட்சம் யுவானை எட்டியுள்ளது. உள்ளூர் நிலைமையின் படி நடுநிலை வருமானத்தை எட்டலாம் என்று தெரிய வருகிறது.
|