29வது பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான மங்களச் சின்னங்கள் Fuwa என்னும் பொம்மை பொருட்கள் சீனா மற்றும் உலகில் வரவேற்கப்படுகிறன. ஆகஸ்ட் திங்கள் 8ம் நாள் முதல், சீனத் தொலைக்காட்சி Fuwa என்ற தலைப்பில் 100 தொகுதி கார்ட்டூன் திரைப்படங்களை ஒளிபரப்பத் துவங்கி, ஒலிம்பிக் பற்றிய அறிவைப் பரவலாக்குகின்றன. இளைஞர்களுக்கு இது மிகவும் பிடிக்கும். இது மட்டுமல்ல, பொது மக்களும் இதை விரும்புகின்றனர். இச்சித்திர வரைபடங்களின் அம்சங்களையும் வடிவங்களையும் புத்தாக்குவது என்பது, சீனாவின் சொந்தக் கார்ட்டூன் தயாரிப்புக்கு அனுபவங்களை வழங்கியுள்ளது என்று இத்துறையினர் கருதினர்.

Fuwa இன் ஒலிம்பிக் கதை என்ற தொலக்காட்சித் திரைப்படத் தயாரிப்புகு பெய்ஜிங் தொலைக்காட்சி நிலையம் 5 கோடி யுவான் ஒதுக்கீடு செய்தது. இதில் 100 தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதியும் 11 நிமிடம் நீடிக்கிறது. இது வரை, சீனாவில் ஒலிம்பிக் மங்களச் சின்னங்கள் என்ற தலைப்பிலான கார்ட்டூன்களில் இதுவே மிகப் பெரியது. 2008ம் ஆண்டு 29வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பெய்ஜிங்கில் துவங்கும் முன், பெய்ஜிங்கில் ஒரு சாதாரண குடும்பத்தின் 8 வயது சிறுவன் பற்றிய கதையை இந்த காட்டூன் படம் வர்ணிக்கிறது. சிறுவனின் பெயர் DAYOU. அவன் பெற்றோரிடமிருந்து தனது பிறந்த நாளுக்கென அன்பளிப்புப் பொருளைப் பெற்றான். இந்த அன்பளிப்புப் பொருள்தான் fuwa. அவனுக்கும் 5 fuwa களுக்கும் இடையில் வேடிக்கையான பல சம்பவங்கள் நிகழ்கின்றன. இதன் மூலம், ஒலிம்பிக் விளையாட்டுக்களின் தோற்றம், வளர்ச்சி, விதிமுறைகளை இயற்றி மேம்படுத்துவது ஆகியவை எடுத்துக்காடபடுகின்றன. அத்துடன், ஒலிம்பிக் விளையாட்டு வரலாற்றில் தலைசிறந்த கதைகளும் இதில் இணைக்கப்படுகிறது.

இவ்வாண்டின் ஆகஸ்ட் 8ம் நாள் முதல், ஒலிபரப்பான ஒரே வகை நிகழ்ச்சிகளுக்கான வரவேற்பு பற்றிய தரவரிசையில் இக்கார்ட்டூன் திரப்படம் முதலிடம் வகிக்கிறது.
நண்பர்களே, பெய்ஜிங் ஒலிம்பிக் மங்களச் சின்னங்களின் கார்ட்டூன் என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்தை தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.
|