• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-15 12:57:18    
விண்வெளி மோதல்

cri

வெகு தெலைவிலுள்ள நட்சத்திரங்கள் மனிதர்களை பாதித்து கொண்டிருக்கின்றன என்ற நம்பிக்கை சோதிடத்தையும், ராசி பலன்களையும் உருவாக்கியுள்ளது. அண்டவெளி ஆய்வுகள் நீண்டு கொண்டே செல்கின்றன. சூரியனை சுற்றி வரும் ஒன்பது கோள்களும் அக்கோள்களின் துணைக்கோள்களும் இணைந்த சுற்றுவட்டப்பாதை சூரிய குடும்பத்தை அமைக்கிறது. புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ என ஒன்பது கிரகங்கள் சூரியனை சுற்றுகின்றன என்ற வரலாறு மாறி புளுட்டோஎன்பது கிரகமே இல்லை என்ற நிலைக்கு ஆய்வுகள் கூர்மையாகியுள்ளன. விண்வெளியில் ஏற்பட்ட ஒரு மோதல் நிகழ்வே பூமியின் மீதான பல்வேறு அழிவுகளுக்கும், உருவாக்கங்களுக்கும் காரணமாக அமைகிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுவே உண்மை என ஆய்வுகள் கூறுகின்றன.

சுமார் 160 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கிடையில் சுற்றிக் கொண்டிருந்த இருபெரும் விண்கற்களின் மோதல் பெருமளவிலான பாறைகளை பூமியின் மேல் விழச் செய்தது. இப்பாறைகளில் ஒன்று டைனோசர் இனத்தையே கூண்டோடு அழித்தது என்று அறிவியல் அறிஞர்கள் அண்மையில் தெரிவித்துள்ளனர். பூமியின் உயிரின வரலாற்றில் மிக முக்கிய அந்த நிகழ்வுக்கான விளக்கத்தை இவ்வாய்வு வழங்கியது. ஏறக்குறைய 10 கிலோமீட்டர் அகலமுடைய விண்கல் ஒன்று மெக்சிகோ யுகாட்டன் தீபகற்பத்தை 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தாக்கியது.

இம்மாபொரும் நிகழ்வு 165 மில்லியன் ஆண்டுகளாக செழிப்பாக வாழ்ந்து திரிந்த டைனோசர் மற்றும் இன்னும் பலவகை உயிரினங்களை அழித்து, பாலூட்டி இனங்கள்; பூவியில் கோலோச்ச பாதைக்காட்டியதோடு காலபோக்கில் மனிதகுல வளர்ச்சிக்கும் வழி செய்தது என பல அறிவியலாளர்கள் நம்புகின்றனர். உலகளவில் ஏற்பட்ட ஒரு சுற்றுச்சூழல் பேரழிவுக்கு இந்த விண்கல் மோதல் மூலக்காரணமாக இருந்திருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த விண்கல் வேகமாக வந்து மோதியதால் பூவியின் மேற்பரப்பிலிருந்து கிளம்பிய தூசும் சிதறிய பாறைத்துகள்களும் வானில் தூக்கி எறியப்பட, மிகப் பெரிய ஆழிபேரலைகளும் உலகுதழுவிய காட்டுதீக்களும் தாண்டவமாட பல்லாண்டுகள் புவி இருளில் மூழ்கியிருந்தது.

அமெரிக்க மற்றும் செக் குடியரசு ஆய்வாளர்கள் கணினி மூலம் கணித்து 105 மைல்கள் மற்றும் 40 மைல்கள் அகலமான இரு விண்கற்களின் மோதல் பூமியில் எதிர்பாராத அழிவை ஏற்படுத்தி இருக்க 90 விழுக்காடு சாத்தியம் உள்ளது என்று கூறுகின்றனர். நதிமூலம் ரிஷிமூலம் போல் புவியில் விண்கல் வந்து மோத காரணமான செவ்வாய் வியாழன் கிரகங்களுக்கிடையில் சூரியனை சுற்றிக்கொண்டிருந்த இரு பெரும் விண்கற்களின் மோதல் சம்பவம் புவியிலிருந்து எறக்குறைய 100 மில்லியனக் மைல்களுக்கு அப்பால் நிகழ்ந்தது என்று அண்மையில் நேச்சர் என்ற அறிவியல் இதழில் வெளியான அவ்வாய்வு கூறுகிறது.

1 2