• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-16 12:49:03    
Bao ding நகர சூரிய ஆற்றல்

cri
இவ்வாண்டில் நகரத்தில் 2 முக்கிய பாதைகளில், 50 சூரிய ஆற்றல் விளக்குகளைப் பொருத்த தொடர்புடைய வாரியங்கள் திட்டமிட்டுள்ளன.
அதேவேளையில், பல குடியிருப்புப் பிரதேசங்களிலும் பூங்காக்களிலும் உள்ள சாலை விளக்குகளை மேம்படுத்துவதில் தொடர்புடைய வாரியங்கள் ஈடுபட்டு வருகின்றன. தமது வாழ்க்கையில் ஏற்பட்ட புதிய மாற்றம் பற்றி MING CHANG குடியிருப்புப் பிரதேசத்தில் வசிக்கும் தாத்தா சாங் கூறியதாவது,

இந்த சாலை விளக்கு இருள் வந்தவுடனே ஒளி வீசுகின்றது. மின் வினியோகத்தின் பற்றாக்குறையால் இதற்கு பாதிப்பு ஏற்படாது. தவிர, இதது பார்ப்பதற்கு அழகானது. பெரும் அளவிலான எரியாற்றலைச் சிக்கனப்படுத்தும் என்றார் அவர்.
சூரிய ஆற்றல் நகரைக் கட்டியமைப்பது, bao ding நகரின் சீரான சூரிய ஒளி வீச்சின் நிலைமையிலிருந்து பிரிக்கப்பட முடியாது. இது மட்டுமல்ல, இந்நகரின் சூரிய ஆற்றல் பயன்பாட்டுத் தொழில் நுட்பமும் சீனாவில் முன்னணியில் இருக்கின்றது. 1990ஆம் ஆண்டுகளின் இறுதி முதல், சீனாவில் அளவில் மிகப் பெரிய சூரிய ஆற்றல்ஆற்றல் மின்கல உற்பத்தி தளமான TIAN WEI YING LI புதிய எரியாற்றல் கூட்டு நிறுவனம் BAO DINGஇன் புதிய உயர் தொழில் நுட்ப வளர்ச்சி மண்டலத்தில் கட்டியமைக்கப்பட்டது.
இக்கூட்டு நிறுவனத்தின் பொறுப்பாளர் SHEN YONG கூறியதாவது,


BAO DING நகரில் சூரிய ஆற்றல்ஆற்றல் நகரைக் கட்டியமைக்கும் திட்டத்தின் படி, சில நடைமுறை தன்மை வாய்ந்த மாதிரித் தன்மை வாய்ந்த சில திட்டப்பணிகளையும் உற்பத்தி பொருட்களையும் வடிவமைத்துள்ளோம் என்றார் அவர்.
தற்போது, BAO DING நகரில் பயன்பாட்டிலுள்ள சூரிய ஆற்றல் சாலை விளக்குகளும், போக்குவரத்து விளக்குகளும் ஒரு நாள் சூரிய ஆற்றலைச் சேகரித்தால் 6 முதல் 7 நாள் வரை இயங்கலாம். வெற்றிகரமான சோதனையின் அடிப்படையில், அடுத்த சில ஆண்டுகளில், BAO DING நகரில், மின்சார விநியோகம், வெப்ப நீர் விநியோகம், வெப்ப காற்று விநியோகம் ஆகியவற்றில் சூரிய ஆற்றல் ஒட்டுமொத்த பயன்பாடு பரவலாக்கப்படும் என்று நகர வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் துணைத் தலைவர் cao ji dong கூறினார். அவர் கூறியதாவது

3 முதல் 5 ஆண்டுகள் வரையான காலத்தில், முழு நகரத்தின் மின்சார தொகுதியிலும் சூரிய ஆற்றல் பயன்படுத்தப்படும். புதிதாகக் கட்டியமைக்கப்படும் குடியிருப்புப் பிரதேசங்களில் வெப்ப காற்று வழங்கும் தொகுதியிலும், நீர் விநியோகத்திலும் சூரிய ஆற்றல் வசதியைப் பொருத்த வேண்டும். 3 முதல் 5 ஆண்டுகள் வரையான முயற்சியின் மூலம், bao ding நகரம் சூரிய ஆற்றல் நகராக மாறுவது உறுதி என்றார் அவர்.