• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-16 12:58:28    
நிலவுத் திருநாள்

cri

இன்று சீனாவில் நிலவுத் திருநாள் கொண்டாடப்படுகிறது. நடு இலையுதிர் கால திருவிழா குடும்பங்கள் ஒன்று சேர்ந்து கொண்டாடி மகிழும் ஒரு நாளாக போற்றப்படுகிறது. சீனச் சந்திர நாள்காட்டியில் 8வது மாதம், 15ம் நாளன்று, இலையுதிர்காலத்தில் நடுப்பகுதியில் இத்திருநாள் கொண்டாடப்படுவதால், நடு இலையுதிர்காலத்திருவிழா என்று பெயர் கொண்டுள்ளது. இந்நாளின் மாலைப்பொழுதில், குடும்பங்கள் ஒன்று கூடி, அழகான விளக்குகளை ஏற்றி, இனிப்புகளை உண்டு, குறிப்பாக நிலா கேக் உண்டு, பெளர்ணமியாய் கண் சிமிட்டும் முழுநிலவின் அழகை ரசிக்கின்றனர்.


இந்நாளில் நிலவு மிக மிக அழகாக, வட்ட வடிவமாக, பளப்பளப்பாக இருப்பதாக மக்கள் உணருகின்றனர். முழு நிலவு, பெளர்ணமி என்பது குடும்ப ஒன்றிணைப்பை, குடும்பத்தினர் அனைவரும் கூடி மகிழ்வதை உணர்த்துகிறது. இதனால் தான் இத்திருநாளை ஒன்று கூடல், ஒன்றிணைப்பு திருநாள் என்று அழைக்கின்றனர். 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த நடு இலையுதிர்காலத்திருநாள் அல்லது நிலவுத்திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
அக்காலத்தில் சீனப் பேரரசர்கள், நல்ல ஒரு ஆண்டாக அமைய விண்ணுலகை நோக்கி மன்றாடினர். சீன சந்திரநாள்காட்டியில், 2வது மாதம் 15ம் நாளன்று காலையில், சூரியனை தொழவும், 8வது மாதம் 15ம் நாளன்று இரவு நிலவைத் தொழுது கொண்டாடி மகிழவும் செய்தனர்.


பெய்சிங்கின் மேற்கு பகுதியில், தற்போது Yue Tan பூங்கா அமைந்துள்ள பகுதி, முன்பு நிலவுக் கோயிலாக இருந்தது. இங்கு தான் பேரரசர்கள் ஆண்டுதோறும் சென்று நிலவுக்கு பல மன்றாட்டுகள் எல்லாம் செய்தனர்.
நிலவுத்திருநாள் தங் வம்சக்காலத்தில் பரவலாக மக்களிடையில் பரவத்தொடங்கியது எனலாம். இதன் போது தான் நிலவை வணங்கி மகிழும் வழமை மக்களிடையே அதிகரித்தது.
சுங் வம்சக்காலத்தில், உறவினர்களுக்கு நிலா கேக் அனுப்பி, குடும்ப ஒன்றிணைப்புக்காக நல்வாழ்த்துக்கள் கூறும் வழமை இருந்தது. இந்நாளில், மக்கள் ஒன்று கூடி, வானத்தை அண்ணாந்து பார்த்து முழு நிலவின் அழகை கண்டு ரசித்தனர். குளங்களுக்குச் சென்ற கரையில் நின்று காற்று வாங்கியபடி நிலவின் அழகை கண்டு களித்தனர்.
மிங் மற்றும் சிங் வம்சகாலத்தில் இந்த நடு இலையுதிர்கால விழா மிகப் பரவலாக, சிறப்பாக கொண்டாடப்படத் துவங்கியது. வழமையான கொண்டாட்டங்கள் தவிர, இந்நாளின் போது ஊதுவத்திகள் ஏற்றுவது, மரக்கன்று நடுகை, டிராகன் நடனம், கோபுரங்களில் விளக்குகள் ஏற்றுவது மற்றும் திமூட்டுவது என பல்வேறு அம்சங்கள் இணைந்தன. அல்லது நிலவை பார்த்து பிரிந்துள்ள குடும்பத்தினரை எண்ணி அவர்களுக்காக நல்வாழ்த்துக்களையும், நல்வாழ்க்கையையும் மனதில் நினைத்து மகிழ்ந்தனர். மேலும், நடு இலையுதிர்காலம், பயிர்கள் கதிர் முற்றி கனத்துத் தொங்க, அதை அறுவடை செய்து முடித்து, பழத்தோட்டங்களில் கனிந்து விளைந்த பழங்களை கொண்டு வந்து வீட்டில் வைக்கும் காலமாகும். நல்ல விளைச்சல் தந்த மகிழ்ச்சியும், ஆண்டு முழுதும் விளை நிலத்தில் செய்த உழைப்புக்கு சற்று ஓய்வு என்ற உணர்வும், விவசாயிகளின் மனதில் நிரம்பியிருக்கும். எனவே, இந்த நடு இலையுதிர்காலத் திருவிழா, சாதாரண மக்களின் கொண்டாட்ட விழாவாகவும் அமைந்துள்ளது.


கதிரவன் சாய்ந்த மாலையும் தேய்ந்து இரவு சூழ இருளை விரட்ட முழு நிலவின் ஒளி புவியெங்கும் பரவ, வீட்டு முற்றத்தில், வீட்டு மாடியில் மேசைகளை வைத்து, குடும்பமாக ஒன்று கூடி, சிரித்து பேசி மகிழ்ந்து, நிலவை நன்றியோடு நினைத்து, அதன் அழகை ரசித்து, உண்டு, மகிழ்ந்து, சிறப்பிக்கின்றனர்.