• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-16 15:03:14    
வளவனூர் புதுப்பாளையம் எஸ் செல்வம்

cri

கேள்வியும் பதிலும்' நிகழ்ச்சி என்னைப் பெரிதும் கவர்ந்தது. நவசீனா நிறுவப்பட்டபின், சீனா அடைந்த வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணமாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சி எவ்வகைகளில் காரணமாக இருந்தது என்பதை சிறப்பான முறையில் கலையரசியும், தமிழன்பனும் விவரித்தார்கள்.


சீனாவின் வளர்ச்சியிலிருந்து, கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கை ஒருபோதுமே பிரிக்க முடியாது. வரலாற்றை கி.மு, கி.பி. என பிரிப்பது வழக்கம். ஆனால் சீனாவின் வரலாற்றை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உருவாவதற்கு முன்பு, உருவான பின்பு என பிரிக்கும் வகையில் சீனாவின் தலையெழுத்தையே கம்யூனிஸ்ட் கட்சி மாற்றியது. கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதிக்குப் பின்பு, கம்யூனிஸ கொள்கை உலகம் முழுதும் ஓங்கி வளர்ந்தது. ஆனால், அதே நூற்றாண்டின் பிற்பாதியில் கம்யூனிஸ நாடுகளின் வரலாறு பெரும் மாற்றத்தை சந்தித்தது. கம்யூனிஸ கொள்கையை வளர்த்த சோவியத் ஒன்றியம் சிதறியது. யூகோஸ்லாவியாவும் பல நாடுகளாக பிரிந்தது. ருமேனியா, போலந்து உள்ளிட்ட நாடுகளில் கூட கம்யூனிஸ கொள்கை வீழ்ச்சி அடைந்தது. ஆனால், சீனாவில் மட்டும் கம்யூனிஸ கொள்கை, மக்களின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. இந்த நேரத்தில், கம்யூனிஸ கட்சியை சீனாவின் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் நடத்திக் காட்டிய மாசேதுங், தெங்சியோபிங், சியாங்சேமின், கூசின்தாவ் உள்ளிட்ட பல்வேறு தலைமுறைத் தலைவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இன்றைய நிகழ்ச்சியின் உள்ளடக்கம் போல, ஒவ்வொரு கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியும் இருக்க வேண்டும் என நான் விரும்புகின்றேன். நிறைவேற்றுவீர்களா?


......... பேளுக்குறிச்சி கெ செந்தில்
17.09.2007 அன்று செய்தித் தொகுப்பில் தாய்லாந்தில் நிகழ்ந்த விமான விபத்து ப‌ற்றிய விரிவான த‌க‌வ‌ல்களை கேட்டேன். இந்த விப‌த்தில் உயிழ‌ந்த‌வ‌ர்க‌ளின் குடும்ப‌த்தவர்கள் அனைவ‌ருக்கும் எனது ஆழ்ந்த‌ இர‌ங்கலை சீன வானொலி த‌மிழ்ப் பிரிவு மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். அண்மை கால‌ங்க‌ளில் அதிக‌ விமான விப‌த்துக்கள் ஏற்ப‌டுவ‌தன் மூலம் அதிக அளவு‌ உயிர் சேத‌ங்கள் ஏற்ப‌டுவது வேத‌னைக்குரியது. இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் இது போன்ற விப‌த்துகள் ஏற்ப‌டா‌மல் பார்க்க வேண்டும். ஆனால் இது சாத்தியமா?
........ மதுரை-20 என் இராமசாமி
2007ம் ஆண்டு ஆசிய வளர்ச்சி வங்கி தனது ஆய்வு அறிக்கையில் சீன மற்றும்
இந்திய பொருளதார வளர்ச்சியின் வேகம் கடந்த 10ஆண்டுகளாக ஏற்படாத மிக உயர்வான நிலையை
எட்டி உள்ளது என சுட்டிக் காட்டியுள்ளது. இது வரவேற்க தக்கது.
........... திருப்பூர்.சின்னப்பன்.இரா
மலர்ச்சோலை நிகழ்ச்சியில் சீனாவில் கட்டப்பட்டு வரும் வானளவு உயர்ந்த கட்டிடம் பற்றி அறிந்தேன். அதில் வானளாவிய என்ற அழகான தமிழ் சொல்லை பயன்படுத்தியமை பாராட்டுக்குறியது.


........ மதுரை-20ஆர்,அமுதாராணி
ஜ.நாவின் அழைப்பின் பேரில் சீன அரசு தனது இஞ்ஜினிரிக் அமைதி காக்கும் படைப்பிரிவை தார்பூர் பிரதேசத்திற்கு நல்லெண்ண அடிப்படையில் அனுப்ப உள்ளது தார்பூர் பிரதேசத்தில்
வளர்ச்சி பணியில் தனது சேவை முத்திரையை பதிக்க உத்தேசித்துள்ளது.சீன அரசின் இச்செய்கை அண்டை நாடுகளிடையே கூட்டாளி உறவை வலுப்படுத்துவது திண்ணம்.