• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-17 21:45:57    
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பற்றி

cri

2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான 2வது உலக செய்தி ஊடக கூட்டம் நேற்று பெய்சிங்கில் துவங்கியது. 2 நாள் கூட்டத்தில், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான ஆட்ட செய்தி அறிவிப்பு மற்றும் செய்தி ஊடகச் சேவைப் பணி குறித்து 130க்கு அதிகமான செய்தி ஊடகங்களின் பிரதிநிதிகளும், சர்வதேச ஒலிம்பிக் குழுவின் அதிகாரிகளும் கூட்டாக விவாதிக்கின்றனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற முதலாவது உலக செய்தி ஊடக கூட்டத்துக்கு பின், பெய்சிங் ஒலிம்பிக் அமைப்பு குழுவின் ஆயத்தப் பணிகளின் புதிய முன்னேற்றத்தை அவர்கள் கேட்டறிந்துள்ளனர். தத்தமது அக்கறை கொண்ட பிரச்சினைகள் குறித்து பெய்சிங் ஒலிம்பிக் அமைப்பு குழுவுடன் தொடர்புடைய வாரியங்களுடன், அவர்கள் தனிப்பட்ட பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.

ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு உயர் நிலை செய்தி ஊடகச் சேவையை வழங்கும் வகையில், எதிர் வரும் 300க்கு மேலான நாட்களில், பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் குழு செய்தி ஊடகச் சேவையின் தொடர்புடைய கொள்கைகளையும் ஒழுங்குகளையும் முக்கியமாக முழுமைப்படுத்தும் என்று பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் துணை இயக்குநர் லியுசிங்மின் தெரிவித்தார்.

2007ம் ஆண்டு உலக கோடைக்கால சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டு போட்டி நேற்று இரவு சீனாவின் ஷாங்காய் மாநகரில் நிறைவுற்றது. இப்போட்டி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி, ஊனமுற்றோருக்கான லட்சியத்தின் வளர்ச்சியைச் சீனா மேலும் ஊக்குவிக்கும் என்று சீனத் துணைத் தலைமை அமைச்சர் Hui Liangyu தெரிவித்தார்.

நேற்று இப்போட்டியின் ஒருங்கிணைப்புக் குழு நடத்திய சிறப்பு கூட்டத்தில் பேசிய அவர், ஷாங்காய் சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டு போட்டி உலக மக்களுக்கு ஒரு திறமை வாய்ந்த சிறப்பு ஒலிம்பிக் கூட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது என்று கூறினார்.

சீனாவில், சிறப்பு ஒலிம்பிக் கருத்தை மேலும் விரிவான முறையில் பரவ வேண்டும் என்று Hui Liangyu கோரினார். சீனா, முழுச் சமூகத்தின் ஆற்றலை ஒருங்கிணைத்து, ஊனமுற்றோர் நலப் பணியை முழுமைப்படுத்தி, சீன ஊனமுற்றோருக்கான லட்சியத்தை புதிய நிலைக்கு உயர்த்த வேண்டும் என்றும் அவர் கோரினார்.