• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-18 14:37:21    
கோடை மாளிகை(ஆ)

cri
1860ல் இரண்டாவது அபினிப் போரின் போது தீய் வாய்ப்பட்ட இந்தப் பூங்கா, 1888ல் பேரரசி டவாகர் சி ஸியால் புதுப்பிக்கப்பட்டது. சீனாவின் கடற்படையை அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் நிதியில் பெரும் தொகைப் பணத்தை அவர் இதற்காகச் செலவிட்டார். கடற்படைப் பயற்சித்தளம் என்ற பெயரில் அமைக்கப்பட்ட இவ்விடத்தை சி ஸி தனது இருப்பிடமாகப் பயன்படுத்தி வந்தார். 1900ஆம் ஆண்டிலும் இப்பூங்கா, எட்டு வல்லரசுகளின் படைகளால் சேதப்படுத்தப்பட்டது. பின்னர், 1903ஆம் ஆண்டு மீண்டும் புனரமைக்கப்பட்ட இந்தப் பூங்கா, சிங் வம்சம் தூக்கியெறியப்பட்ட 13 ஆண்டுகளுக்குப் பின் 1924ல் பொது மக்களுக்காகத் திறந்துவிடப்பட்டது.
பேரரசி அங்கு தங்கியிருந்த போது அல்லது அவருடைய பிறந்த நாளில் அங்கு இசை நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. இந்நிகழ்ச்சிகள் பல நாட்கள் தொடர்ந்து நடைபெறுவது உண்டு. கோடை மாளிகையின் அற்புதங்களில் ஒன்று, அங்குள்ள நீண்ட தாழ்வாரம் ஆகும். நீண்ட ஆயுள் மலையடிவாரத்திலுள்ள கட்டிட வரிசைகளை இணைத்து ஏரியின் வட கரை வழியாகச் செல்லும் இத்தாழ்வாரம், 728 மீட்டர் நீளம் உடையது. சீனாவின் மிக நீளமான இப்பூங்காத் தாழ்வாரம், உத்தரக்கட்டைகளால் 273 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
பூங்காவில் நுழைந்ததும் நீலமும் பசுமையும் கலந்த ஏரியில் 17 வில்களைக் கொண்ட சலவைக்கல் பாலம், கண்களைக் கவர்ந்திழுக்கின்றது.
இதை விட வேறு சிறிய ஆறு பாலங்களும் கோடை மாளிகையில் உள்ளன.
இன்னும் கிழக்கு அணைக்கட்டில் உள்ள வெண்கல எருதைக் கண்ட பயணிகள் அதை உற்றுப் பாராமல் போகவே மாட்டார்கள். சீனாவின் பரம்பரையைப் பின்பற்றி, பேரரசர் சியன் லுங், குன் மிங் ஏரிக்கரையில் இந்த எருதை நிறுவினார்.
கடைசியாக, நல்லிணக்க அக்கறை நந்தவனம் பற்றிக் கூறாமல் இருந்தால், கோடை மாளிகை தொடர்பான விபரம், முழுமையைனது என்று சொல்ல முடியாது. வட கிழக்கு மூலையில் முடங்கியுள்ள இந்நந்நதவனம் பூங்காவுக்குள் பூங்கா எனப் போற்றப்படுகின்றது. அமைதியான நீர் நிலையும் நீரோர விதானங்களும் வளைந்து நெளிந்து செல்லும் தாழ்வாரமும் கிழக்கு சீன ஜியாங் சு மாநிலத்தின் வூ ஸியிலுள்ள புகழ் பெற்ற ஜி சாங் தோட்டத்தைப் போல் காட்சியளிக்கின்றன.
இன்னும் அது பற்றி அறிய வேண்டுமானால், நீங்கள் நேரில் சென்று பார்க்க வேண்டுமேயன்றி, அதன் கச்சிதமான கவர்ச்சி வனப்பை வார்த்தைகளால் வர்ணிக்கவே இயலாது.
நுழைவு கட்டனம்: சுற்றுலாக் காலம் : 40 யுவான், இதர காலம் : 20 யுவான் (மாணவர்களுக்கு:அரை கட்டனம்)
பூங்கா திறக்கப்படும் நேரம் : சுற்றுலாக் காலம்: காலை 6:30 மணி முதல் மாலை 6 மணி வரை
இதர காலம் : காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை