• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-18 10:56:55    
சீனாவில், 60லட்சம் பொறியல் மாணவர்கள்

cri

கடந்த ஆண்டு, சீனாவின் பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்ற பொறியியல் மாணவர்களின் எண்ணிக்கை, 60 லட்சக்தைக் தாண்டியுள்ளது. இது உலக முன்னணியில் உள்ளது. எனினும், பொறியியல் கல்வியின் புத்தாக்கம், வல்லுனர்களின் பயிற்சித்தரம் முதலிய குறியளவுகளில் சீனாவுக்கும் உலக முன்னணி நாடுகளுக்குமிடையே இன்னும் பெரும் இடைவெளி நிலவுகிறது.

இக்குறையை நீக்கும் பொருட்டு, சீனக் கல்வியமைச்சும், சீனப்பொறியியல் கழகமும் பொறியியல் கல்வி சீர்திருத்தம் பற்றிய நடைமுறைத் திட்டத்தைக் கூட்டாகச் செயல்படுத்தத் தீர்மானித்துள்ளன.

புகழ்பெற்ற சின் குவா பல்கலைக்கழகம்、தியென் சின் பல்- கலைக்கழகம்、வட கிழக்கு சீனாவிலுள்ள ஹார்பின் தொழிற்துறைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 10 உயர் கல்வி நிலையங்கள், தத்தமது நடைமுறைக்கு ஏற்ற சீர்திருத்தத் திட்டங்களை வகுக்கவுள்ளன்.

காந்த ஆற்றலுடைய ஆடவர்

ருமேனிய நாட்டில், 40 வயதான ஓலர் என்ற ஆடவரை, மனிதக்காந்தம் என்பார்கள். இதற்குக் காரணம், அவரது தோல், எந்தப் பொருளையும கவரக் கூடிய ஆற்றல் உடையது. உலோகப் பொருளாயிணும் மரப் பொருளாயிணும் பீங்கான் பொருளாயிணும் அனைத்துப் பொருட்களையும் அவரால் கவர முடியும். வியக்கத்தக்கது என்னவென்றால், அவரது உடலால், 23 கிலோகிராம் எடையுள்ள தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றைக் கவர்ந்து தூக்க முடியும் என்பதாகும்.

செல்லிடப்பேசியும் புற்றுநோய்

ஆபத்தும்

10 ஆண்டுகளுக்கு மேலாக செல்லிடப் பேசியைப் பயன்படுத்துவோர், மூளைப் புற்றுநோயால் பீடிக்கப்படும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று 《கற்றுச்சூழலும் தொழில் மருத்தவவியலும்》 என்ற இதழில் அண்மையில் வெளியிடப் பட்ட ஆய்வு முடிவு ஓன்று குறிப்பிடுகின்றது.

சுவீடனின் ஏர்புரூ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சர் மீர்ட் தலைமையிலான ஆய்வுக் குழு ஓன்று, "தெல்லிடப்பேசி செய்தித்தொடர்பும் உடல் நலமும்" என்ற தலைப்பிலான ஆய்வுத் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளில், ஆய்வாளர்கள் மொத்தம் 11 ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். 10 ஆண்டுகளுக்கு மேல் செல்லிடப்பேசியைப் பயன்படுத்துவோரின் முளையையும் காதுகளையும் இணைக்கும் நரம்புகளில் புற்றுக் கழலை வளரக் கூடிய வாய்ப்பு, சாதாரண மக்களைப் போல் 2 மடங்கு ஆகும் என்று இந்த ஆய்வுகள் மூலம் அவர்கள் முடிவுக்கு வந்துள்ளனர்.

பெற்றோர், தம் குழந்தைகளை, செல்லிடப்பேசியைப் பயன்படுத்த அனுமதிக்காமல் இருப்பது மேல். ஏனென்றால், குழந்தைகளின் மண்டை ஓடு மெலிந்ததாக உள்ளது. அதன் நரம்பு மண்டலமும் வளர்ச்சியுறும் காலத்தில் உள்ளது. இதனால் மூளை கழலை வளர்வதற்கான வாய்ப்பு அதிகம் என்று மீர்ட் முன்மொழிந்தார்.

எனினும், மீர்ட் உள்ளிட்ட ஆய்வாளர்களின் ஆய்வு முடிவு மீது பலர் ஐயம் கொண்டுள்ளனர் என்பது அறியத் தக்கது.

பிரிட்டனின் 《டெய்லி தெலிகிராப்》 என்ற நாளேடு அக்டோபர் 8 ஆம்நாள் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

சென்னை – சீன சரக்கு கப்பல்

போக்குவரத்து

சென்னையிலிருந்து சீனாவுக்குச் செல்லும் சரக்குக் கப்பல் போக்குவரத்துச் சேவை துவங்கியுள்ளது.

சென்னை துறைமுகத்திலிருந்து சீனாவின் சின்தோ、 லியன்யுங்காங், சாங்காய் ஆகிய துறைமுகங்களுக்குச் செல்லும் சரக்குக் கப்பல் போக்குவரத்துச் சேவைக்கான துவக்க விழா செப்டெம்பர் 27ஆம் நாள் சென்னையில் நடைபெற்றது.

சீனா செல்லும் எம்.பி.டாலர்ஸ் கப்பலில், சரக்குப் பெட்டகங்களை ஏற்றும் பணியை, சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத் தலைவர் கே. சுரேஷ் துவக்கிவைத்தார். இந்தப் புதிய சரக்குக் கப்பல் போக்குவரத்துச் சேவை மூலம், சீனாவிலிருந்து இயந்திரங்கள், மின்னணு பொருட்களை இறக்குமதிசெய்ய ஏதுவாக இருக்கும். மேலும், சென்னை துறைமுகத்திலிருந்து சீனாவுக்கு கிரானைட் கற்கள்、பலகைகள் ஆகியன அதிக அளவில் ஏற்றுமதிசெய்யப்படும் என்று செய்தியாளரிடம் கே. சுரேஷ் தெரிவித்தார்.

இந்தோனேசியாவில் ஒரே நாளில்

8 கோடி மரங்கள் நடும் திட்டம்

இந்தோனேசியாவைப் பசுமையாக்கும் பொருட்டும், அழிந்து வரும் காடுகளைப் பாதுகாக்கும் பொருட்டும், நாடு முழுவதும் 8 கோடி மரக்கன்றுகள் நடத் திட்டமிடப்பட்டுள்ளது. வருகின்ற நவம்பர் 28ம் நாள் இந்த மரங்கள் நடப்படவிருக்கின்றன. யூக்கலிப்டஸ் மற்றும் தேக்கு மரங்கள், அதிக அளவில் நடப்பட இருக்கின்றன. நாடு முழுவதும் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் அரசுத்தலைவரும் கலந்து கொள்வார்

இதற்காக 70 ஆயிரம் கிராமங்களுக்கு, இந்த மரக்கன்றுகள் பிரித்து கொடுக்கப்பட்டு வருகின்றன. கிராமங்களில் உள்ள இளைஞர்கள், அரசு அதிகாரிகள், தன்னார்வலர்கள் ஆகியோரைக் கொண்டு, இந்த மரக்கன்றுகள் நடப்படுகின்றன. மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தோனேசியாவில் அதிக அளவு காடுகள் அழந்து வருகின்றன என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.