• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-18 10:41:20    
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு

cri

தமிழன்பன்.........மாச்சேதுங் சிந்தனை பற்றி நாம் விவாதித்தோம்.

கலை.........ஆமாம். தலைவர் மா சீன மக்கள் நேசிக்கும் தலைவராகவும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் இருந்தார்.

தமிழன்பன்.........சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு பற்றி நீங்கள் எனக்காக விளக்கி கூறலாமா?

கலை........ நிச்சயம். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடும் அதன் மத்திய கமிட்டியும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உச்ச தலைமை பீடங்களாகும்.

தமிழன்பன்........உச்ச தலைமை பீடத்தின் கடப்பாடு என்ன?

கலை........கட்சியின் முக்கிய பிரச்சினைகள் தேசிய மாநாட்டில் விவாதிக்கப்பட்டு தீர்மானிக்கப்பட வேண்டும். கட்சியின் தேசிய மாநாட்டின் கடப்பாட்டை கூறினால் மத்திய கமிட்டியின் அறிக்கைகளை கேட்டறிந்து ஆய்வு செய்ய வேண்டும். மத்திய கட்டுப்பாட்டு பரிசோதனை கமிட்டி சமர்பித்த அறிக்கை தேசிய மாநாட்டில் கேட்டறியப்பட்டு பரிசீலனை செய்யப்படும். கட்சியின் சாசனத்தை திருத்துவது, மத்திய கமிட்டியை தேர்ந்தெடுப்பது, மத்திய கட்டுப்பாட்டு கமிட்டியை தேர்ந்தெடுப்பது ஆகியவை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டின் கடமைகளாகும்.

தமிழன்பன்........சரி கலை தேசிய மாநாடு எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகின்றது?

கலை.......தேசிய மாநாடு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகின்றது. தேசிய மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள் அனைவரும் சீனாவின் பல்வேறு மாநிலங்கள், தன்னாட்சிப் பிரதேசங்கள், மைய அரசின் நேரடித் தலைமையின் கீழுள்ள மாநகரங்கள் மக்கள் விடுதலை படை ஆகியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவர். ஒவ்வொரு பிரதிநிதியும் பல்வேறு நிலை கட்சி அமைப்புகளால் பரிந்துரைக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவர். மிகப் பல கட்சி உறுப்பினர்கள் ரகசிய முறையில் வாக்களிப்பார்கள். மேலதிகமான வாக்குகளை பெற்றவர் தேசிய மாநாட்டின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்படுவார்.

தமிழன்பன்........தேர்ந்தெடுக்கும் போது ஏதாவது கண்காணிப்பு முறை உண்டா?

கலை.......உண்டு. பிரதிநிதிகள் மிகப் பல கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களின் எண்ணத்தை போதியளவில் பிரதிநிதித்துவப்படுத்துவதை உத்தரவாதம் செய்யும் வகையில் வேட்பாளர் பற்றி தேர்வு பிரிவுகள் பொது மக்களிடமிருந்து கருத்துக்களை கேட்டறிய வேண்டும். பொது மக்களின் கண்காணிப்பில் வேட்பாளர் இருக்க வேண்டும்.

தமிழன்பன்.......சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு எந்த ஆண்டில் எந்த இடத்தில் நடைபெற்றது?

கலை......... .சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு 1921ம் ஆண்டு ஜுலை திங்களில் சீனாவின் ஷாங்காய் மாநகரில் நடைபெற்றது.

தமிழன்பன்.........அப்போது ஏதாவது பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா?

கலை.......ஆமாம். 《சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பணித் திட்டம்》மாநாட்டில ஏற்றுக்கொள்ளப்பட்டது. கட்சியின் போராட்ட இலக்கு உறுதிப்படுத்தப்பட்டது.

தமிழன்பன்............ மாநாடு நடைபெற்ற போது வேறு எதாவது முயற்சி மேற்கொள்ளப்பட்டதா?

கலை..........ஆமாம். மாநாட்டில் அப்போதைய உள்நாட்டு வெளிநாட்டு நிலைமை, கட்சியின் அடிப்படை கடமை, கட்சியின் கோட்பாடுகள் மற்றும் கட்டமைப்பு பற்றி விவாதிக்கப்பட்டன.

தமிழன்பன்.......அப்படியிருந்தால் அப்போது முதல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது என்று சொல்லலாம். சரிதானே.

கலை.......ஆமாம். 1921ம் ஆண்டு ஜுலை திங்கள் ஷாங்காய் மாநகரில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு நடைபெற்றமை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டதை கோடிட்டுக் காட்டுகிறது.

தமிழன்பன்.........கலை இன்றைய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் பங்கெடுத்தன் மூலம் சீனாவின் மாபெரும் தலைவரான மாச்சேதுங் சிந்தனை பற்றியும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பற்றியும் நன்றாக அறிந்து கொண்டுள்ளேன். எனக்கும் நேயர்களுக்கும் அதிகமான சீனப் புரட்சி பற்றிய அறிவை தந்ததற்கு மிக்க நன்றி.

கலை........ தமிழன்பன் நன்றியும் பாராட்டும் தேவையில்லை. என் விளக்கத்தின் மூலம் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு பற்றியும் மாச்சேதுங் சிந்தனை பற்றியும் நீங்களும் எமது நேயர்களும் நன்றாக அறிந்து கொண்டால் நான் மன நிறைவு அடைவேன்.