• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-18 15:21:00    
யுன்னான் மாநிலத்தின் ஷாங்க்ரிலா

cri

பிற்பகல் வேளை, ஷாங்க்ரிலா கற்சாலையில் சூரிய ஒளி நிறைந்து காணப்படுகிறது. சாலையில் நடந்த போது, அழகான ஷாங்க்ரிலா என்னும் இசையொலியைக் கேட்டோம். இவ்விசை வரும் திசையை நோக்கி சென்று, நாங்கள் இசை மதுவகம் ஒன்றில் நுழைந்தோம். இம்மதுவகத்தின் உரிமையாளர் பெயர் அ தூ. இவ்விசை, அவருக்கு மிகவும் பிடித்தமான இசையாகும். விருந்தினர் வரும் போதெல்லாம், அவர் சாக்ஸஃபோன் இசைக்கருவி மூலம், இவ்விசையை இசைப்பது வழக்கம். அவர் கூறியதாவது:

 
2003ம் ஆண்டில், நான் இங்கு வந்து ஒரு திங்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். இவ்விடம் எனக்கு மிகவும் பிடித்து விட்டது என்றார் அவர்.
பின்னர், அ தூ, ஷாங்க்ரிலா வந்து இங்கேயே வசித்து வருகிறார். திருமணம் செய்து, குழந்தையும் பெற்றார்.
திபெத் இனத்தைச் சேர்ந்த தா சான் என்பவர், நாங்கள் ஷாங்க்ரிலாவில் அறிந்துகொண்ட புதிய நண்பராவார். பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் மாநகரங்களில் அவர் ஒரு காலத்தில் கல்வி பயின்று, பணி புரிந்த பிறகு, ஷாங்க்ரிலாவுக்குத் திரும்பி, தங்குவிடுதி ஒன்றைத் திறந்து வைத்தார். அந்தக் கட்டிடம், குறைந்தது 300 ஆண்டுகால வரலாறுடையது. சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ளதால், 10க்கு அதிகமான அறைகள், வசதியும் சொகுசும் தருகின்றன. தா சான் கூறியதாவது:

 
இது, மூன்னூறு ஆண்டு வரலாறுடைய பழைய வீடு ஆகும். ஓராண்டு காலத்தில் இவ்வீட்டைத் திருத்தி கட்டியமைத்தேன். இவ்விடுதி உள்ள இடம் மிகவும் நல்ல இடம் என்றார் அவர்.
இவ்விடுதி, தா சான் திறந்து வைத்த தங்கு விடுதியாக மட்டுமல்லாது. அவர் நண்பர்களை அறிந்துகொள்ளும் மகிழ்ச்சியான இடமாகவும் உள்ளது. இதில், வெளிநாட்டுப் பயணிகள் பலர் உள்ளனர். தாமஸ் பிளேக்கும், அவருடைய நண்பர்களும், ஆஸ்திரேலியாவிலிருந்து வந்தனர். அவர்கள், பழைய ஷாங்க்ரில நகரத்தில் சில நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். தனிச்சிறப்பியல்புடைய இவ்விடுதியுடன், பழைய நகரத்தின் நகரவாசிகளும் அவர்களுடைய மனதில் ஆழப்பதிந்துள்ளனர்.


நாங்கள் இங்கே இரண்டு நாட்கள் தங்கினோம். பீ சியாங் போஃ உள்ளிட்ட இயற்கைக் காட்சி இடங்களைச் சென்று பார்த்தோம். உள்ளூரின் பல சிற்றுண்டிகளை, உட்கொண்டோம். இங்கு ஈர்ப்பு ஆற்றல் அதிகம். இந்த விடுதி மிகவும் அழகானது. நாங்கள் வேறு ஹோட்டல்களில் தங்கியுள்ளோம். ஆனால், பழைமை வாய்ந்த கட்டிடமான இவ்விடுதியை, எங்களுக்கு மிகவும் பிடிக்கிறது என்கிறார்கள் அவர்கள்.
எமது செய்தியாளர் பார்த்த மதுவகமும், தங்கிய விடுதியும், துக்சுங் என்னும் இடத்தில் அமைந்துள்ளன. இது, ஷாங்க்ரிலாவில் மிகவும் பண்டைய நகரமாகும். ஆயிரமாண்டு வரலாறுடையது. இப்பண்டைய நகரத்தின் கற்சாலை, தாமரைப்பூக்களைப் போன்று, வேறுபட்ட திசைகளை நோக்கி சென்றன. திபெத் இனத் தனிச்சிறப்பியல்புடைய கல் வீடுகள், இப்பண்டைய நகரத்தில் அமைந்துள்ளன. வீடுகளின் புறச்சுவர்கள், வெள்ளையடிக்கப்பட்டன.

பகலில் பார்த்தால், எங்கெங்கும் சூரிய ஒளி வீசுவது போல் காட்சியளிக்கும். இரவில் பார்த்தால், சந்திரனின் ஒளியில் வீடுகள் மிகவும் அழகானவை. இதனால், துக்சுங், வெள்ளைக் கல்நகரமாக அழைக்கப்படுகிறது.