• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-19 14:59:18    
சீனாவின் தை இனம்

cri
தை இன மக்கள், முக்கியமாக யுன் நான் மாநிலத்தின் xi shuang ban na தை இனத் தன்னாட்சி மாவட்டம், de hong, jing po தன்னாட்சிப் மாவட்டம்,geng ma, meng lian முதலிய இடங்களில் கூடி வாழ்கின்றனர். இவ்வினத்தின் மக்கள் தொகை, 10 லட்சத்து 25 ஆயிரமாகும்.

தை இனம், நீண்ட வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இனமாகும். கிபி முதல் நூற்றாண்டில் தான், சீன மொழி வரலாற்று பதிவேட்டில் புத்தகங்கள் தை இனம் பற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது.

தை இனத்துக்குச், சொந்த மொழி உண்டு. இது ஹான்-திபெத் மொழிக் குடும்பத்தின் சுவாங்-தை கிளையைச் சேர்ந்தது. தற்போது பயன்படுத்தப்படுகின்ற இரு வகை தை மொழியும், இந்தியாவின் தென்பகுதியில் பரவிய பாலி மொழியிலிருந்து வளர்ந்தவை. தை இன மக்கள், ஆடல் பாடல்களில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமல்ல, சிறந்த பண்பாட்டையும் கொண்டுள்ளனர். அவற்றில் தை நாள் காட்டி, மருத்துவம், நீண்ட செய்யுள் முதலியவை புகழ் பெற்றவை. மங்கோலிய, திபெத், உயிகூர் ஆகிய மூன்று இனத்தின் மருத்துவத்துடன், தை இன மருத்துவம், சீனாவின் மிக புகழ் பெற்ற நான்கு சிறுப்பான்மை தேசிய இன மருத்துவ முறைமைகளாகும். தை நாடகம் 100 ஆண்டுகளுக்கு அதிகமான வரலாறு கொண்டுள்ளது. தை இன மக்கள், பௌத்த மத நம்பிக்கை கொண்டவர்களாவர்.

தை இனப் பிரதேசத்தில், xi shuang ban na மாவட்டத்தின் ரப்பர் உற்பத்தி குறிப்பிட்டப்பட்டது. Pu er தேயிலை, உலகில் புகழ் பெற்றது. கனிமப்பொருள் அகழ்வு, இயந்திர தயரிப்பு, மின் சார உற்பத்தி, வேதியல்தொழில், தோல், தாள் உற்பத்தி முதலிய துறைகளிலான தொழில் நிறுவனங்கள் இடம் பெறுகின்றன.

தை நாள் காட்டியின் படி, ஆண்டின் 6வது திங்களில் நடைபெறும் நீர் தெளிப்பு விழா, தை இனத்தின் மிகக் கோலாகலமான விழா ஆகும். இது, தை இன மக்கள் பழையதை விட்டு புதியதை வரவேற்கும் திருநாளாகும். விழாவின் போது, இம்மக்கள் நீர் தெளித்து வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றனர். மூதாதையர்களை வழிபடுவது, நீர் தெளிப்பு, படகுப் போட்டி, வானவேடிக்கை முதலியவை இவ்விழாவின் முக்கிய நடவடிக்கைகளாகும்.

தை இனப் பிரதேசத்தின் வானிலை, ஈரத்தன்மையும் வெப்பமும் கொண்டு காணப்படுகிறது. மிக அதிகமான வகை பூச்சிகள் வளர்கின்றன. பூச்சிகளைக் கொண்டு தயாரித்த பல்வகை உணவுகள், தை இன மக்களின் உணவுகளில் ஒரு முக்கிய பகுதியாகும். அவற்றில் சிள் வண்டு, சிலந்தி, எறும்பு முட்டை முதலியவை மக்களால் வரவேற்கப்பட்ட உணவு வகைகளாகும்.