
19 வயதுக்குட்பட்ட ஆசிய இளம் மகளிர் கால்பந்து போட்டியின் 3வது இடத்துக்கான போட்டி, 16ம் நாள் நடைபெற்றது. உபசரிப்பு நாடான சீனாவும், தென்கொரியாவும் இப்போட்டியில் மோதின. இப்போட்டியில் வெற்றி பெற்ற அணி, அடுத்து ஆண்டு உலக இளம் மகளிர் கால்பந்து போட்டியில் கலந்து கொள்ளும் தகுதியை பெறும். எனவே இந்தப் போட்டியில் இரு அணிகளும் பெரும் கவனம் செலுத்தின. சீனாவின் பிரபல வீராங்கனை ma xiao xu காயமுற்றதால், இப்போட்டியில் விளையாட வில்லை. இப்போட்டியின் முற்பாதியில், சீன அணி, பல தவறுகளை இழைத்து, தென்கொரியாவுக்கு வாய்ப்புகளை வழங்கியது. ஆனால், தென்கொரிய அணி, கோல் அடிக்கவில்லை. பிற்பாதியில், சீன அணி, சற்று திறமையாக விளையாடியது.

31வது நிமிடத்தில், கோனல் வாய்ப்பை பயன்படுத்தி, சீன அணியின் ruanxiaoqing பந்து தலையில் முட்டி ஒரு கோல் போட்டார். இறுதியில் சீன அணி, 1-0 என்ற கோல் கணக்கில் தென்கொரிய அணியை தோற்கடித்து, வெண்கல பதகத்தை பெற்றது. இது மட்டுமல்ல, சீனா அடுத்து ஆண்டு உலக இளம் மகளிர் கால்பந்து போட்டிக்கான தகுதியையும் பெற்றது.

2007ம் ஆண்டு உலகக் கோப்பை மேசைப்பந்து ஆடவர் போட்டி அக்டோபர் திங்கள் 14ம் நாள் ஸ்பெயினின் பார்செலொனா நகரில் முடிவடைந்தது. ஆடவர் இறுதி ஆட்டத்தில், சீனாவின் பிரபல வீரர் Wang Haoஉம் ஏதன்ஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் சாம்பியனான தென் கொரிய வீரர் Rye Seung-minஉம் மோதினர். இப்போட்டியில் 4-0 என்ற ஆட்ட கணக்கில் Rye Seung-minஐ வென்று, Wang Hao உலகக் கோப்பையை அள்ளிச்சென்றார். அவர் உலக நிலை ஒற்றையர் போட்டியில் சாம்பியன் பட்டத்தைப் பெறுவது இதுவே முதன் முறையாகும்.
|