அங்கே வாழ்கின்ற ஆயர்களை பொறுத்தவரை அவர்களுடைய வருமானத்தை பாதிக்கும் முக்கிய காரணிகள், காலநிலையும், மழை பொழவும் ஆகும். வறட்சி காலத்தில், விலங்குகளின் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும் வகையில், அந்த கிராமத்தின் பல குடும்பங்களில் ஆழ்குழாய் கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன. தொடர்புடைய செலவில் 60 விழுக்காடு சீன அரசிந் ஒதுக்கீட்டில் கிடைக்கலாம். டோயாவை காட்டிலும், னெர்தென்க்ரிரேவின் குடும்பத்தினர் அனைவரும் தமது புல்வெளியை நன்றாக நிர்வாகம் செய்ய வேண்டும். கிராமத்தின் தலைவராகவும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகவும், அவருடைய குடும்பம், கிராமத்திலுள்ள இரண்டு வறிய குடும்பங்களுக்கு உதவி அளிக்க வேண்டும். அவர் கூறியதாவது
என்னுடைய கிராமத்தில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள், ஒன்று அல்லது இரண்டு வறிய குடும்பத்துக்கு உதவி அளிக்க வேண்டும் என்றார் அவர். E er deng bao li ge கிராமத்திலுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகிளையின் செயலாளர் வுரேகெரிரே அம்மையாரும் மகிழ்ச்சியுடன் எங்களைச் சந்தி்த்தார். அவர், 40லிருந்து 50 வயதுக்குட்பட்டவர். அதிகம் பேசமாட்டார். ஆனால், ஆர்வத்துடன் எங்களை கவனித்தார். அவர், மங்கோலிய நீள்ராகப்பாடலை நன்றாக பாடலாம் என்று அறிந்ததால் அவரை பாடும்படி அழைத்தோடு, எமது கோரிக்கைக்கிணங்க, அவர் பாடுகிறார்.
புல்வெளியின் ஆயர் பிரதேசத்தில் பெண்மணிகள் அதிகமான பணி புரிய வேண்டும். முன்பு, நாளுக்கு நாள் சுறுசுறுப்பாக பணி புரிய வேண்டும், வீட்டின் ஆண்கள் பணியில் அதிகம் பங்கெடுக்கவில்லை. ஆனால்,ஆண்கள் விளையாட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இப்போது அல்ல, ஆண்கள் அதிகமாக வீட்டின் பணியில் ஈடுபடுகின்றனர். பெண்மணிகள், பல விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
|