• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-22 15:35:48    
பெய்ஜிங் ஒலிம்பிக் சின்னம் கொண்ட கார்ட்டூன் திரைப்படம் பற்றிய பாராட்டு

cri

இவ்வாண்டின் ஆகஸ்ட் 8ம் நாள் முதல் ஒளிப்பரப்படுகின்ற பெய்ஜிங் ஒலிம்பிக் சின்னம் கொண்ட கார்ட்டூன் திரைப்படம், குழந்தைகளால் மட்டுமல்ல பொது மக்களாலும் வரவேற்க்கப்படுகிறது. பெய்ஜிங் பார்வையாளர் dingyiming இந்த கார்ட்டூன் திரைப்பட வடிவத்தில் ஒலிம்பிக் கருத்துக்களைப் பரவலாக்குவதை நல்லதென பாராட்டினார். இவ்வடிவம் மூலம் ஒலிம்பிக் பற்றி மக்களுக்கு தெரியாத கதைகள், fuwa என்னும் 5 பொம்மைகளால் தெளிவாக மக்கள் அனைவரிடம் அறிமுகப்படுத்தப்பட்டன. சிறப்பு வாய்ந்த இக்கார்ட்டூன் திரைப்படம் நகைச்சுவையாக இருப்பதோடு ஒலிம்பிக் பற்றிய அம்சங்களை மக்கள் அறிந்துகொள்ள உதவுகிறது என்று அவர் கூறினார்.

சீனப் பாரம்பரிய கலைச்சிறப்புக்களை இக்கார்ட்டூன் திரைப்படம் வெளிக்கொணர்ந்துள்ளது. சீனப் பாணியிலான இக்கார்ட்டூன் திரைப்படத்தின் சீனப் பாணி இதை மேலும் சிறந்ததாக மாற்றியுள்ளது என்று பார்வையாளர் செல்வி linlu தெரிவித்தார். இக்கார்ட்டூன் திரைப்படத்தை அவர் ஏற்கனவே கண்டு ரசித்துள்ளார். இத்திரைப்படம் நிறைந்த அழகான படங்களைக் கொண்டுள்ளது. சீனத் தனிச் சிறப்பு வாய்ந்த ஓவிய வடிவங்களால் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இக்கார்ட்டூன் திரைப்படத்துக்கும் பிற நாடுகளின் கார்ட்டூன் திரைப்படத்துக்கும் இடையில் நகைச்சுவை மற்றும் வண்ண ஓவியங்களில் வேறுபாடுகள் நிலவது குறிப்பிடத்தக்கது.

சீனப் பாணியுடைய கார்ட்டூன் திரைப்படம் ஒன்றை சீனப் பாரம்பரிய கலையின் அடிப்படையில் கலைஞர்கள் ஒன்றாக தீட்டியுள்ளனர். கார்ட்டூன் திரைப்படம் ஒன்றின் தயாரிப்பு பொதுவாக நேரம் பல்லாண்டு நீடிக்கிறது. சீனப் பாரம்பரிய கதைகள் என்ற தலைப்பில் கார்ட்டூன்கள் இவ்வாறு தயாரிக்கப்பட்டனவை. கடந்த 10 ஆண்டுகளில், ஜப்பான், ஐரோப்பா மற்றும் அமெரிக்க கார்ட்டூன் வடிவங்கள் பொது மக்களால் வரவேற்கப்பட்டன. அது சீன இளம் தலைமுறையினரிடம் செல்வாக்கை ஏற்படுத்தியது. ஆனால், கார்ட்டுன் திரைப்படத் தயாரிப்பில் தற்சார்பு புத்தாக்கத் தன்மை மற்றும் இனத் தனிச்சிறப்பின் முக்கியத்துவத்தை சீனக் கார்ட்டூன் துறையினர் மேன்மேலும் உணர்ந்து வருகின்றனர். புதிய அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் வெளிநாட்டுக் கார்ட்டூன் திரைப்படத் தயாரிப்பை வணிகமயமாக்கும் அனுபவத்தை, சீனப் பாரம்பரிய பண்பாட்டுடன் இணைத்து, தனிச்சிறப்பு வாய்ந்த கார்ட்டூன் திரைப்படத்தைத் தயாரிக்க வேண்டும் என்று அவர்கள் கருதுகின்றார்கள்.

நண்பர்களே, பெய்ஜிங் ஒலிம்பிக் மங்களச் சின்னங்களின் கார்ட்டூன் என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.