சமூகப் பொருளாதார வளர்ச்சி கணக்கீடு மற்றும் புள்ளியல் அமைப்பு முறை
cri
சமூகப் பொருளாதார வளர்ச்சி கணக்கீடு மற்றும் புள்ளியல் அமைப்பு முறையை சீனா தொடர்ந்து மேம்படுத்தி, வேளாண் வளம் மற்றும் சூழல், கிராமங்களின் பொருளாதாரம் மற்றும் சமூகம், கிராமவாசிகளின் வாழ்க்கை ஆகியவற்றிலான புள்ளியல் பணியை வலுப்படுத்தும். இதன் மூலம் ஓரளவு வசதியான சமூகத்தை முழுமையாக உருவாக்குவதை உத்தரவாதம் செய்யும் என்று சீனத் துணைத் தலைமையமைச்சர் Zeng Pei Yan கூறியுள்ளார். இன்று பெய்சிங்கில் நடைபெற்ற 4வது சர்வதேச வேளாண் கணக்கீடு மற்றும் புள்ளியல் மாநாட்டின் துவக்க விழாவில் அவர் கலந்து கொண்டு, உரை நிகழ்த்தினார். சோஷலிசச் சந்தை பொருளாதாரத்துக்கு ஏற்ற, உலகில் பொதுவாக பயன்படுத்தப்படும் விதிகளுக்குப் பொருந்திய நவீன கணக்கீடு மற்றும் புள்ளியல் அமைப்பு முறையை உருவாக்க சீனா பாடுபட்டு வருவதாக அவர் கூறினார்.
|
|