• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-23 12:23:58    
யுங் ஹெ கொங் லாமா கோயில் (அ)

cri

யுங் ஹெ கொங் லாமா கோயில், திபெத் தவிரந்த முழு நாட்டிலுமான மிக முழுமையான, மிகப் பெரிய ஒரு லாமா கோயில் ஆகும். இது, பெய்ஜிங் மாநகரின் வடகிழக்கு மூலையில் இருக்கிறது. 1694ம் ஆண்டு, இக்கோயில் கட்டியமைக்கப்பட்டது. அப்போது, அது யுங் ஜின் வாங் ஃபூ என அழைக்கப்பட்டது. 1725ம் ஆண்டு, யுங் ஹெ கொங் என பெயர் மாற்றப்பட்டது. 1744ம் ஆண்டு, அது, லாமா கோயிலாக மாறியது.

இங்கு ஐந்து மாமண்டபங்கள் முக்கியக் கட்டிடங்களாகவுள்ளன. முதலாவதாக, தியன் வாங் மண்டபம். இரண்டாவதாக, யுங் ஹெ கொங்கின் மைய மண்டபம். மூன்றாவதாக, யுங் யோ மண்டபம். நான்காவதாக, ஃபா லூன் மண்டபம். ஐந்தாவதாக, வான் ஃபூ க்கே மண்டபம். இவ்வைந்து மாமண்டபங்களும், கம்பீரமாக காணப்படுகின்றன.

அனைத்துக் கட்டிடங்களின் முற்றங்களும், தெற்கே வடக்காக அகலம் குறைந்து கொண்டே செல்கின்றன. ஆனால், மண்டபங்கள், படிப்படியாக உயர்கின்றன. இவை, ஹான், மான், மேங், ச்சாங் ஆகியத் தேசிய இனங்களின் சிறப்புகள் வாய்ந்தவை. யுங் ஹெ கொங் லாமா கோயிலின் தென் முற்றத்தில், ஒரு பெரிய சுவர், மூன்று உயரமான மாளிகைகள், இரண்டு கற் சிங்கங்கள் ஆகியவை இடம் பெறுகின்றன. மாளிகைக்குப் பின்பகுதியில், கற்களால் போடப்பட்ட தாழ்வாரம் இருக்கிறது. அதன் வடக்குப் பகுதியில், யுங் ஹெ கொங்கின் முக்கிய வாயில் உள்ளது. வாயிலின் இரு பக்கங்களிலும் மணிக் கோபுரங்கள் இருக்கின்றன. வெளியே, வளைவு சுழிவான தாழ்வாரம் இருக்கிறது. இக்காட்சி அரிய ஒன்றாகும். வடக்கில், எட்டு கோண மணிமண்டபம். இதற்கு அருகில், பேரரசர் ச்சியான் லோங் எழுதிய யுங் ஹெ மென் என்ற பலகை தொங்கவிடப்படுகிறது. இதுவே தியன் வாங் மண்டபம் ஆகும்.

இதன் மையப்பகுதியிலுள்ள தங்க நிற அரியாசனத்தில், புன்சிரிப்புடன் புத்தர் Maitreya அமர்ந்துள்ளார். மாமண்டபத்தின் இரு பக்கங்களில், நான்கு வண்ணச் சுடுமண் சிலைகள் கிழக்கும் மேற்குமாய் எதிரெதிரே நிற்கின்றன.

தியன் வாங் மண்டபத்தின் வெளியே, வெண்கல முக்காலி, யூ பேய் மணிமண்டபம், யுங் ஹெ கொங் மண்டபம் முதலியவை அமைந்துள்ளன. மண்டபத்தின் வடக்கில் மூன்று புத்தர் சிலைகள் உள்ளன.