பசிபிக் மாக்கடலைக் கடந்த சீன-அமெரிக்க நேரடி இழை ஒளியியல் கம்பி திட்டப்பணி (Trans-Pacific Express, TPE) நேற்று சீனாவின் Shan Dong மாநிலத்தின் Qing Dao நகரை ஒட்டிய கடற்பரப்பில் கட்டியமைக்கப்படத் துவங்கியது. திட்டப்படி, 2008ஆம் ஆண்டு ஜுலை திங்கள் இது பயன்படுத்தப்படும். தற்போது, சீனாவில் மிக அதிக திறன், மிக நீண்ட நெறி மற்றும் மிக முன்னேறிய தொழில் நுட்பமுடைய கடலடி கம்பித்தொடர்பு முறைமை இதுவாகும். சீனப் பெருநிலப்பகுதி, தைவான், தென் கொரியா மற்றும் அமெரிக்கா இக்கம்பியால் இணைக்கப்படும். 2008ஆம் ஆண்டில், உலகளவில், 500 கோடி மக்கள், தொலைக்காட்சி மூலம் பெய்சிங்கில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைக் கண்டு ரசிப்பர். இத்திட்டப்பணி கட்டி முடிந்த பின், ஒலிம்பிக் செய்தித்தொடர்பின் அதிக தேவையை நிறைவு செய்யும்.
|