க்ளீட்டஸ் – வணக்கம். இன்று ஒரு சிறப்பான மீன் வகை உணவின் தயாரிப்பு பற்றி கூறுவோம். மீன் சாப்பிடப் பிடிக்கும் நேயர்கள் கவனமாக இதை கேட்க வேண்டும் என்று விரும்புகின்றோம்.
வாணி – ஆமாம். முதலில் நான் தேவையான பொருட்களை எடுத்து கூறுகின்றேன். பூண்டு 5 வெங்காயம் தேவையான அளவு இஞ்சி தேவையான அளவு உப்பு 5 கிராம், சோயா சாஸ் 10 கிராம் சமையல் மது 10 கிராம், புளிக் காடி 10 கிராம் சர்க்கரை 8 கிராம்
க்ளீட்டஸ் – முக்கிய பொருள் பற்றி சொல்லவில்லையே
வாணி – சொல்வேன். Crucian என்னும் மீன் வகை இன்று தேவைப்படும். இல்லை என்றால், வேறு சிறிய வகை ஆற்று மீன்களைப் பயன்படுத்தலாம்.
வாணி – முன்பு மீன் வறுவலைத் தயாரிப்பது போல, இன்று முதலில் மீன்களை நன்றாக சுத்தம் செய்து, மீனுக்கு உள்ளே இருக்கும் பொருட்களையும் செதில்கள் எல்லாவற்றையும் நீக்க வேண்டும்.
க்ளீட்டஸ் – பிறகு, சிறிது நேரம் உலர வைக்க வேண்டும். இதற்கு சுமார் அரை மணி நேரம் தேவை.
வாணி -- வாணலியை அடுப்பின் மீது வைத்து, இதில் சற்று சமையல் எண்ணெயை ஊற்ற வேண்டும். உலர்ந்த மீனை அதில் வைக்கவும். வைத்த பின், விரைவாக மீனை இடம்மாற்றக் கூடாது. சற்று பின்னர், ஒரு பக்கம் பொன் நிறமாக மாறிய பின், மறு பக்கத்தை மாற்றி, பொன்னிறமாகும் வரை நன்கு பொறிக்க வேண்டும். பிறகு, வாணலியிலிருந்து இதனை வெளியில் எடுக்கலாம்.
க்ளீட்டஸ் – அடுத்து, வாணலியை சுத்தம் செய்து, மீண்டும் அடுப்பின் மீது வைக்கவும். இதில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி, வெங்காயம், இஞ்சி ஆகியவற்றை போடலாம். பிறகு, சோயா சாஸ், சமையல் மது, காடி, உப்பு, சர்க்கரை முதலியவற்றை இதில் சேர்க்கலாம். நன்றாக கொதிக்க விடுங்கள்.
வாணி – கடைசியாக, pressure cooker இல், மீனையும், வேகவைக்கப்பட்ட மசாலா சாஸையும் வைக்கலாம். கொஞ்சம் சூதாட்ட நீரை ஊற்றலாம். மீனின் 3இல் 2 பகுதி மசாலா சாஸில் இருக்க வேண்டும். வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை மீன்கள் மீது வைக்கலாம்.
க்ளீட்டஸ் – சுமார் 20 நிமிடங்கள் வேகவிடுங்கள்.
வாணி – இப்போது இன்றைய மீன் வறுவல் தயார்.
க்ளீட்டஸ் – வாணி, அடுத்த வாரம் எந்த உணவு வகை பற்றி நேயர்களுக்கு அறிமுகப்படுத்துவோம்?
வாணி – அடுத்த வாரம், சுவையான சோயா பால் பற்றி நேயர்களுக்கு அறிமுகப்படுத்துவோம்.
க்ளீட்டஸ் – சோயா பால், சோயா அவரையால் தயாரிக்கப்படும் சாறு ஆகும்.
வாணி – ஆமாம். வீட்டில் கலவை இந்திரம் இருந்தால், காய்ந்த சோயா அவரை தயார் செய்து கொண்டால் மட்டும் போதும். ஒரு குறிப்பு, இந்த சாற்றைத் தயாரிப்பதற்கு முன், சோயா அவரையை சுத்தம் செய்த பிறகு, தண்ணீரில் சுமார் 10 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
|