• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-23 13:18:05    
நிலவுத் திருநாள்-Chang'erஇன் கனத

cri

இந்த நிலவுத்திருநாள் அல்லது நடு இலையுதிர்காலத் திருநாளுக்கு பின்னணியில், எல்லா விழாக்களுக்கும் இருப்பது போல, பழங்கதை ஒன்று உண்டு. உண்மையில், சீனர்களிடையே நிலவோடு தொடர்புடைய பழங்கதைகள் நிறைய உண்டு. இதில் மிகப் பிரபலமானது Chang Erயின் கதை. முன்பொரு காலத்தில், புவியை ஒரு தீவிர வறட்சி வாட்டியெடுத்தது. வானில் 10 சூரியன்கள் குமுறும் எறிமலையாய் தகித்துக் கொண்டிருந்தன. புவியில் மரங்களும், புல் பூண்டுகளும் உலர்ந்து வாடி மடிந்தன.

வெப்பம், வறட்சியால் புவிப்பரப்பு விரிசலடைந்து, காணப்பட்டது. பசி தாகம் வாட்டி மக்கள் பலியாயினர். இதையெல்லாம் கண்ட விண்ணுலக அரசன், Hou Yi என்பவரை உதவிக்காக அனுப்பி வைத்தான். Hou Yi புவிக்கு வந்ததும், தன் செந்நிற வில்லில், வெண்ணிற அம்புகளை பொருத்தி ஒன்றன் பின் ஒன்றாய், 9 சூரியன்களை வீழ்த்தினான். இதனால், வெப்ப நிலை குளிர்ந்தது. மழைபொழிந்து, ஆறுகள் பெருக்கெடுத்து ஓடின. புல்லும், மரமும் தழைத்து வளர்ந்தன. புவி வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது, மனிதகுலம் காப்பாற்றப்பட்டது.
ஒரு நாள், அழகான இளம்பெண்ணான Chang Er மூங்கிலால் செய்யப்பட்ட பாத்திரத்தில், நீரோடையிலிருந்து தண்ணீரை முகர்ந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாள். அப்போது இளைஞன் ஒருவன் அவளிடம் குடிக்க தண்ணீர் கேட்டான். செந்நிற வில்லும், வெண்ணிற அம்புகளும் சுமந்து கொண்டிருந்த அந்த இளைஞன், புவியை, மனிதகுலத்தை மீட்டவன், காப்பாற்றியவன், விண்ணுலகைச் சேர்ந்த Hou Yi என்று அறிந்த Chang Er, குடிக்க நீர் தந்ததோடு, அன்பையும், மரியாதையையும் உணர்த்தும் விதமாய் அழகான மலர் ஒன்றை பறித்து அவனிடம் தந்தாள். Hou Yi, வெண்ணிற நரியின் அழகான ரோமத்தை அவளுக்கு பரிசாக, அன்பளிப்பாக தந்தான். இச்சந்திப்பு இருவருக்குமிடையில் காதல் மலரக் காரணமானது. பின்னர் இருவரும் காதல் வியப்பட்டு, திருமணமும் செய்து கொண்டனர். மனிதர்களுக்கு இறப்பு என்பது இயற்கை. Chang Erடன் எப்போதும் மகிழ்ச்சியுடன் வாழ விரும்பினான் Hou Yi எனவே முடிவற்ற வாழ்வு தரும் அமுதத்தைத் தேடி புறப்பட்டான். மேற்கு மகாராணி வசித்த குன்லுன் மலைக்குச் சென்ற, Hou Yiவின் நற்செயல்களுக்காக, முடிவில்லா வாழ்க்கை மரத்தில் விளைந்த கணிகளின் விதைகளை பொடி செய்து தயாரித்த, முடிவிலா வாழ்வு தரும் அமுதத்தை தந்தனுப்பினாள் மகாராணி. ஆனால், இருவரும் சேர்ந்து அருந்தினால், இருவரும் முடிவிலா வாழ்வு பெறலாம், ஒருவர் மட்டும் அருந்தினால் அவர் விண்ணுலகுக்கு கொண்டுச்செல்லப்படுவார் என்று கூறினார், மகாராணி.

 Hou Yiயும் அவனது மனைவியான Chang Erம் 8ம் மாதம் 15ம் நாள், முழு நிலவு ஒளிரும் இரவில் இந்த அமுதத்தை பருக முடிவு செய்தனர். ஆனால், இத்திட்டத்தை அறிந்த Feng Meng என்ற இரக்கமற்ற, கொடூர மனிதன் முழு நிலவு நாளில் திட்டமிட்டு Hou Yiயை கொன்றான். பின், Hou Yiன் வீட்டுக்கு சென்று Chang Erஐ தன்னிடம் அமுதத்தை தருமாறு வற்புறுத்தினான். Chang Er, அசரவில்லை, திடீரென அந்த அமுதத்தை முற்றாக தானே குடித்து முடித்தாள். பின் கணவன் இறந்த துக்கத்தில், அவன் உடல் இருந்த இடம் சென்று அழுது புலம்பினாள். அமுதம் வேலை செய்யத் தொடங்கியது, மெல்ல மெல்ல, விண்ணோக்கி மேலெழும்பினாள் Chang Er. பின் புவிக்கு அருகில் இருப்பதால், நிலவில் வசிக்க முடிவெடுத்தாள், Chang Er. விண்ணுலகைச் சேர்ந்தவளாக மாறிய போதும், மரணத்துக்கு விலக்குபெறாத மனிதர்கள் வசிக்கும் புவியிலேயே. அவளது மனமும் லயித்திருந்தது. அவளது அன்புப் காதலன் ஆசைக்கணவன் Hou Yiஐயும் அவள் மறக்கவில்லை. Chang Er நிலவின் ஒளியாக மாறி புவிக்கு நல்ல பயன்களை, அதிர்ஷ்டத்தை கொண்டு வந்தாள் என்று பின்னாளில் கூறப்பட்டது.
இதனால் தான் இன்றளவும், காதலர்கள், தங்கள் உண்மைக் காதலை நிலவின் கீழ் நின்று உறுதி கூறுகின்றனர். தான் காதலிக்கும் நபரை பிரிந்து வேற்றிடத்தில் வசிப்போர். விரைவில் காதலருடன் இணைய, முழு நிலவின் ஒளியில் நின்று வேண்டுகின்றனர்.


திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. ஆனால், நிலவில் உருவாகின்றன என்று சீனர்களின் நம்பினர். நிலவில் உள்ள முதியவர் ஒருவர், இளைஞர்களும், இளம் பெண்களும், செந்நிற கயிற்றைக் கொண்டு, கால்களை கட்டுகிறார். எனவே, திருமணமாகாத பெண்கள் நிலவில் உள்ள இந்த முதியவரை நடு இலையுதிர்கால திருநாளில் மன்றாடி, விரைவில் கால் கட்டு அணிந்து மணம் முடிக்க வேண்டினர் என்று கூறப்படுகிறது.