• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-23 13:27:06    
அயோடின் பற்றாக்குறை நோயை ஒழிப்பது

cri

சீனாவில் அயோடின் பற்றாக்குறை நோயை ஒழிக்கும் பணி தெளிவான வெற்றி பெற்றிருந்தாலும், மேற்கு பகுதியில் நிலைமை இன்னும் கடுமையாகவே இருக்கின்றது என்று சீனத் துணை சுகாதார அமைச்சர் wang long de அண்மையில் வடமேற்கு பகுதியிலுள்ள உருமுச்சியில் தெரிவித்தார். ஆகையால், 2010ம் ஆண்டுக்குள் முழு நாட்டின் 95 விழுக்காட்டுக்கு மேற்பட்ட நகரங்களிலும் வட்டங்களிலும் அயோடின் பற்றாக்குறை நோய் ஒழிப்பதென்ற இலக்கை நிறைவேற்றும் வகையில், மேற்கு பகுதியில் இப்பணியை மேலும் விரைவுபடுத்த வேண்டும்.


வேதியியல் பொருட்களில் ஒன்றான அயோடின் மனித உடலில் இன்றியமையாத சத்து ஆகும். மனித உடம்பில் அயோடின் பற்றாக்குறையாக இருந்தால், கண்டமாலை நோய், மூளை வளர்ச்சி குன்றிய நோயர் முதலிய நோய்கள் ஏற்படும். அயோடின் பற்றாக்குறை நிலைமை சீனாவில் கடுமையாக இருக்கின்றது. பெரும்பாலான மாநிலங்களிலும் நகரங்களிலும் அயோடின் பற்றாக்குறை நோய் அதிகமாகக் காணப்படுகின்றது.


மே திங்களின் நடுப் பகுதியில், சீனச் சுகாதார அமைச்சகம், வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம், சீனத் தலைமை உப்புத் தொழில் நிறுவனம் ஆகியவை, சின் ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலை நகரான உருமுச்சியில், அயோடின் பற்றாக்குறை நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புப் பணித் திட்டம் பற்றிய கலந்தாய்வு கூட்டத்தை நடத்தின.  கூட்டத்தில், சீனத் துணை சுகாதார அமைச்சர் wang long de கூறியதாவது


அயோடின் பற்றாக்குறை நோய் பற்றி 2005ம் ஆண்டு நாடளவில் நடைபெற்ற 5வது ஆய்வு, 2006ம் ஆண்டு நடைபெற்ற வட்ட நிலையிலான கண்காணிப்பு முடிவு ஆகியவற்றின் படி, சீன மக்களுக்கிடையில்  அயோடின் சத்து தரம் பொதுவாக சரியான நிலையிலேயே இருக்கின்றது. அயோடின் உப்பை உட்கொள்ளும் மக்கள் தொகை, குழந்தைகளில் கண்டமாலை நோயாளிகள் வகிக்கும் வகிதம், சிறுநீர் அயோடின் நிலைமை ஆகியவை அயோடின் பற்றாக்குறை நோய் தடுப்புக்கான சர்வதேச இலக்கை எட்டியுள்ளன. சீனாவின் அயோடின் பற்றாக்குறை நோய் ஒழிப்பு பணி உலகில் முன்னணியில் நுழைந்துள்ளதாக இது கோடிட்டுக் காட்டுகின்றது என்றார் அவர்.


கடந்த சில ஆண்டுகளாக, அயோடின் சேர்ந்த உப்பை உட்கொள்வதை முக்கியமாகக் கொண்ட ஒட்டுமொத்த நடவடிக்கைகளை சீனா சில முக்கிய பிரதேசங்களில் மேற்கொண்டு வருகின்றது. இந்த நடவடிக்கைகள் பயன் பெற்றுள்ளன என்று உண்மைகள் நிரூபித்துள்ளன.1994ம் ஆண்டு, சீன அரசவை நாடளவில் அயோடின் சேர்ந்த உப்பை உட்கொள்வது பற்றி பிரச்சாரம் செய்யத் துவங்கியது. இந்நடவடிக்கை நல்ல பயன் பெற்றுள்ளது என்று சீனாவில் சூழல் சார்ந்த நோய்களின்  தடுப்புச் சங்கத்தின் துணைத் தலைவர் எடுத்து கூறினார். அவர் கூறியதாவது.