• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-10-23 13:39:57    
17வது தேசிய மாநாடு பற்றிய நேயர்களின் கருத்துக்கள்

cri

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 17வது தேசிய மாநாடு அக்டோபர் திங்கள் 15 ஆம் நாள், அதாவது நேற்று முன்தினம் துவங்கிய செய்தியை அறிந்து பெரிதும் மகிழ்ச்சி அடைந்தேன்.

துவக்க நாளில் சீன அரசுத் தலைவர் வழங்கிய, 12 பகுதிகளை உள்ளடக்கிய "சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிச மாபெரும் கொடியை ஏந்தி, ஓரளவு வசதியான சமூகத்தை முழுமையாக உருவாக்குவதில் புது வெற்றி காண பாடுபடுவது" என்ற அறிக்கையில், வெளிநாட்டு திறப்பு மற்றும் சீர்திருத்தக் கொள்கை நடைமுறைக்கு வந்த கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் சீனா பெற்ற அரும்பெரும் சாதனைகள் மிகவும் சிறப்பான முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக நான் கருதுகின்றேன். கடந்த 30 ஆண்டுக்காலம், சீனாவுக்கு எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு எதிர்வரும் 20 ஆண்டுக்காலமும் மிகவும் முக்கியமானவை. வளர்ச்சியை நிலைநிறுத்தும் அதே வேளையில், வேகமான வளர்ச்சியினால் ஏற்படும் பாதிப்புக்களையும் சீனா கவனமுடன் கையாள வேண்டும்.

அமைதியான சமூகத்தைக் கொண்டிருக்கும் சீனாவின் விரைவான வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள இயலாத பல நாடுகள், சீனாவின் அதிவேக வளர்ச்சி ஆபத்தில் முடியும் என வேண்டாத கவலைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கும் வேளையில், அவற்றின் கணிப்புக்களை சீனா பொய்யாக்க வேண்டும். சீனப் பெருநிலப்பகுதியுடன் தைவான் பிரதேசத்தை இணைத்தல், கிராம-நகர மக்களின் வாழ்க்கைத் தரத்தில் உள்ள இடைவெளியைக் குறைத்தல், அதிகமான கட்டுமானப் பணிகளால் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்த்தல், பல்வேறு துறைகளில் பொதுமக்களின் வெளிப்படையான பங்களிப்பை அதிகரித்தல், ஏழை நாடுகளுக்கு உதவி அளித்தல் மற்றம் மருத்துவச் சிகிச்சைக் கட்டணத்தை குறைத்தல் போன்றவற்றில் 17வது தேசிய மாநாடு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

ஒருவார காலம் நீடிக்கும் இத்தேசிய மாநாடு மாபெரும் வெற்றி பெற அனைத்து நேயர்களின் சார்பில் என் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.